தமிழ்நாடு

ரயிலில் சென்னை வந்த தண்ணீர் அமைச்சர்கள் வருகைக்கு நிறுத்தி வைப்பு - பப்ளிசிட்டிக்காக அட்டூழியம்

சென்னையில் ஏற்பட்ட தண்ணீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு வாய்ப்பிருந்தும் ,திறப்பு விழா என்ற பெயரில் அமைச்சர்கள் காலதாமதத்தினால் மீண்டும் குடிநீரை வழங்குவதில் கால தாமதமாகி உள்ளது

ரயிலில் சென்னை வந்த தண்ணீர்  அமைச்சர்கள் வருகைக்கு நிறுத்தி வைப்பு - பப்ளிசிட்டிக்காக அட்டூழியம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தமிழகத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. பற்றாக்குறை அதிகரித்த சூழலில் மாநிலம் முழுவதும் மக்கள் குடிநீருக்காக அலைந்து வருகின்றனர். பத்து, இருபது நாட்களுக்கு ஒருமுறை, மிகக்குறைந்த அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படும் அவலநிலை உருவாகியுள்ளது.

இதையடுத்து, சென்னையின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய, ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.

ரயிலில் சென்னை வந்த தண்ணீர்  அமைச்சர்கள் வருகைக்கு நிறுத்தி வைப்பு - பப்ளிசிட்டிக்காக அட்டூழியம்

இன்று காலை 7 மணிக்கு ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் புறப்பட்டது. ரயிலின் ஒரு வேகனில் 54,000 லிட்டர் தண்ணீர் வீதம் 55 வேகன்களில் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு வரப்ப்பட்டது. பிற்பகலில் ரயில் வில்லிவாக்கம் வந்து சேர்ந்தது. இதுபோன்ற தினமும் இரண்டு ரயில்கள் மூலம், தினமும் 10 லட்சம் லிட்டர் தண்ணீட் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து குழாய் மூலம் கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையம் கொண்டு செல்லப்படும். அங்கிருந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் லாரி மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும்.

இன்று பிற்பகல் தண்ணீர் கொண்டு வந்த ரயில் வில்லிவாக்கம் வந்தடைந்தவுடன் மக்களுக்கு கொண்டு செல்லவில்லை. மாறாக அமைச்சர்கள் வந்து ரிப்பன் வெட்டி திறந்து வைப்பதற்காக கத்திருப்பில் வைக்கப்பட்டது. சில மணிநேரங்கள் கழித்து அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் பல்லைக் காட்டிக் கொண்டே வந்து ரிப்பன் வெட்டி குழாயை திறந்து விட்டனர். அதன் பிறகே தண்ணீர் சுத்திகரிப்புக்கு சென்றது.

ரயிலில் சென்னை வந்த தண்ணீர்  அமைச்சர்கள் வருகைக்கு நிறுத்தி வைப்பு - பப்ளிசிட்டிக்காக அட்டூழியம்

தண்ணீர் இல்லாமல் நாவரண்டு இருக்கும் மக்களின் தாகம் புரியாமல், அவசரத் தேவையைக் கூட பப்ளிசிட்டிக்காக காக்க வைக்கும் அளவுக்கு தான் இருக்கிறது அ.தி.மு.க அமைச்சர்களின் அக்கறை. குழாயை திறந்து விடும் போது அவர்களின் முகத்தில் தெரிந்த பெருமை இருக்கிறேதே... ஏதோ சாதித்தது போல. நீர் மேலாண்மையில் அரசு தோற்றுப் போனதன் விளைவே இந்த தண்ணீர் பஞ்சம் என்பதை இப்போது கூட உணர்ந்ததாக தெரியவில்லை.

banner

Related Stories

Related Stories