தமிழ்நாடு

“எங்களுக்கே தண்ணி இல்ல; இதுல சென்னைக்கு எப்டி?” - கொதித்தெழுந்த வேலூர் மக்கள்!

சென்னைக்கு ரயில் மூலம் ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் எடுத்து வரும் பணிக்கான சோதனை ஓட்டத்தை எதிர்த்து வேலூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

“எங்களுக்கே தண்ணி இல்ல; இதுல சென்னைக்கு எப்டி?” - கொதித்தெழுந்த வேலூர் மக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தண்ணீர் பிரச்னையால் தமிழக மக்கள் தினந்தோறும் அவதிப்பட்டு வருகின்றனர். ஒரு குடம் தண்ணீருக்காக மணிக்கணக்கில் காத்திருக்கும் அவல நிலை சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் காணும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், பருவமழையும் அவ்வப்போது கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிவருகிறது. விரக்தியின் விளிம்பில் உள்ளனர் தமிழக மக்கள். ஆளும் தரப்போ முறையான நடவடிக்கைகள் ஏதும் எடுக்காமல், வெறும் யாகத்தை மட்டும் நடத்தி வெப்பச்சலனத்தால் பெய்த மழையை தாங்கள்தான் யாகம் செய்து வரவழைத்ததாக பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

“எங்களுக்கே தண்ணி இல்ல; இதுல சென்னைக்கு எப்டி?” - கொதித்தெழுந்த வேலூர் மக்கள்!

இப்படி இருக்கையில், சென்னைக்கான குடிநீர் தேவைக்காக ரயில் மூலம் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டுவந்து விநியோகிக்கப்படும் என எடப்பாடி அரசு அறிவித்தது. ரயில் மூலம் தண்ணீர் கொண்டுவரப்படுவதற்காக சோதனை பணிகளும் நடைபெற்று வருகிறது. கமிஷன் அடிப்பதற்காக இந்த திட்டத்தை அ.தி.மு.க அரசு அறிவித்துள்ளது என தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் குற்றஞ்சாட்டின.

ஆனால் நிலைமையோ தலைகீழாக உள்ளது. வேலூர் மாவட்டத்திலேயே தண்ணீர் பிரச்னை உள்ள நிலையில் சென்னையின் குடிநீர் தேவைக்கு எப்படி ஜோலார்பேட்டையில் இருந்து விநியோகிக்க முடியும் என கேள்வி எழுப்பி, வேலூரில் இருந்து சென்னைக்கு குடிநீர் வழங்கினால் மக்கள் போராட்டத்தில் இறங்குவர் என ஏற்கெனவே தி.மு.க பொருளாளர் துரைமுருகன் பேசியிருந்தார்.

“எங்களுக்கே தண்ணி இல்ல; இதுல சென்னைக்கு எப்டி?” - கொதித்தெழுந்த வேலூர் மக்கள்!

இதனை உண்மையாக்கும் வகையில் ஜோலார்பேட்டையை அடுத்த சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல், முற்றுகை என பல்வேறு வகையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு குடிநீர் எடுத்துச் செல்வதற்கான சோதனை ஓட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கோடியூர் பகுதியில் குடிநீர் பிரச்னை நிலவி வருகிறது என புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் மக்கள் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளனர்.

“எங்களுக்கே தண்ணி இல்ல; இதுல சென்னைக்கு எப்டி?” - கொதித்தெழுந்த வேலூர் மக்கள்!

அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீரை உரிமையுடன் கேட்டு பெறமால் சொந்த மாநிலத்தில் உள்ள கொஞ்சநஞ்ச நீரையும் கமிஷனுக்காக மக்கள் திட்டம் எனும் பெயரில் கொள்ளையடிப்பதை ஒருபோதும் மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதை வேலூர் மக்கள் தங்களின் போராட்டத்தின் மூலம் நிரூபித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories