தமிழ்நாடு

பொள்ளாச்சி : 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 9 பேர் மீது பாய்ந்தது போக்சோ !

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 9 பேர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.

பொள்ளாச்சி : 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 9 பேர் மீது பாய்ந்தது போக்சோ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இதனிடையே கடந்த சில நாட்களாக சிறுமி பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த வந்தார். அப்போது பொள்ளாச்சி குமரன் நகரைச் சேர்ந்தவர் அமானுல்லா என்ற இளைஞருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் நண்பர்களாக இருந்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை அமானுல்லா, சிறுமியை தன்னுடைய வீட்டுக்கு வரும்படி அழைத்துள்ளார். இதை நம்பி சிறுமியும் அவரது வீட்டுக்கு சென்றார். அங்கு இரண்டு பேரும் தனியாக வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென அமானுல்லாவின் நண்பர்கள் 5 பேர் வீட்டுக்குள் நுழைந்தனர். பின்னர் ஆறு பேரும் சேர்ந்து சிறுமியை கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து தப்பித்த சிறுமி, வீட்டுக்கு சென்று தனக்கு நேர்ந்த கொடுமையை பற்றி தனது வீட்டில் கூறியுள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் வீட்டார் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

போலீசார் தீவிர விசாரணை நடத்தி அமானுல்லா, பகவதி, ஜமீன்ஊத்துக்குளியை சேர்ந்த முகமது அலி, அழகாபுரி வீதியை சேர்ந்த டேவிட் செந்தில், செரீப்காலனியை சேர்ந்த முகமது ரபீக், மடத்துக்குளத்தை சேர்ந்த அருண்நேரு, குமரன் நகரை சேர்ந்த சையது முகமது, சி.டி.சி. காலனியை சேர்ந்த இர்ஷாத்முகமது, இர்ஷாத் பாஷா ஆகிய 9 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் திண்டுக்கல்லை சேர்ந்த பிரபு என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஏற்கனவே பொள்ளாச்சியில் இளம்பெண்களை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கின் பரபரப்பு இன்னும் அடங்கவில்லை. தற்போது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 9 பேர் கைதான சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

banner

Related Stories

Related Stories