தமிழ்நாடு

காணாமல் போன முகிலன் திருப்பதியில் இருப்பதாக தகவல்?

காணாமல் போன சமூக செயற்பாட்டாளர் முகிலனை திருப்பதியில் பார்த்ததாக முகிலனின் பள்ளித் தோழர் சண்முகம் தகவல்.

காணாமல் போன முகிலன் திருப்பதியில் இருப்பதாக தகவல்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

சமூக செயற்பாட்டாளர் முகிலன், கடந்த பிப்ரவரி மாதம் முதல் காணாமல் போனார். அவரை கண்டுபிடித்து தரக்கோரி ஹென்றி திபேன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

முகிலன் காணாமல் போன வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் காணாமல் போன முகிலனை திருப்பதியில் பார்த்ததாக முகிலனின் பள்ளித் தோழர் சண்முகம் சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய முகிலனின் பள்ளித் தோழர் சண்முகம், '' திருப்பதியில் ரயில் நிலையத்தின் முதல் நடைமேடையில் காணாமல் போன முகிலனை நேரில் பார்த்தேன். முகிலனை நேரில் பார்த்த தகவலை அவரது மனைவியிடம் கூறினேன் '' என்று தெரிவித்தார். மேலும், ஆந்திர காவல்துறையின் பிடியில் முகிலன் இருப்பதாக அவரது நண்பர் சண்முகம் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories