தமிழ்நாடு

வேலூர் தொகுதிக்கு தேர்தல்... சட்டப்பேரவை கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க திட்டமா?

சட்டப்பேரவை கூட்டத்தை ஜூலை 30-ம் தேதிக்கு முன்னதாகவே முடிப்பது குறித்து பேரவை செயலகம் ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறது.

வேலூர் தொகுதிக்கு தேர்தல்... சட்டப்பேரவை கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க திட்டமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து சட்டப்பேரவை கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிப்பது குறித்து சட்டப்பேரவை செயலகத்தில் இன்று ஆலோசனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

தமிழக சட்டப்பேரவையில் துறை ரீதியிலான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. ஜூலை 1 முதல் தொடங்கிய சட்டப்பேரவை கூட்டம் ஜூலை 30-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் ஆகஸ்ட் 5ம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து சட்டப்பேரவை கூட்டத்தை ஜூலை 30-ம் தேதிக்கு முன்னதாகவே முடிப்பது குறித்து பேரவை செயலகம் ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறது.

சட்டப்பேரவை கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிப்பது குறித்து விவாதிக்க இன்று சட்டப்பேரவை ஆய்வுக் குழு கூட்டம் கூடுகிறது. அதன்படி, சனிக்கிழமைகளிலும் சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்தி அலுவலக வேலை நாட்களை ஈடுகட்ட திட்டமிடப்படும் எனத் தெரிகிறது.

banner

Related Stories

Related Stories