தமிழ்நாடு

டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் : நீதிமன்றத்தில் உத்தரவாதம்!

தென்மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நடத்தி வந்த வேலை நிறுத்தப் போராட்டம் தற்போது வாபஸ் பெற்றப்பட்டுள்ளது.

டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் : நீதிமன்றத்தில் உத்தரவாதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஆயில் நிறுவனங்கள் 5 ஆண்டுக்கு ஒரு முறை டேங்கர் லாரி உரிமையாளர்களுடன் வாடகை ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டு சமையல் எரிவாயுவை, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து, சிலிண்டர்களில் காஸ் நிரப்பும் மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபடுகிறார்கள். இதற்காக, நாமக்கல்லை சேர்ந்த 5 ஆயிரத்து 540 டேங்கர் லாரிகள் தமிழகம், கேரளா, ஆந்திரா, பாண்டிச்சேரி, கர்நாடகா, தெலங்கான ஆகிய 6 மாநிலங்களில் இயக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு ஆயில் நிறுவனங்கள் நடத்திய புதிய வாடகை டெண்டரில், பல புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டன. அந்தந்த மாநில பதிவு எண் கொண்ட வாகனங்களுக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படும் என ஆயில் நிறுவனங்கள் அறிவித்தன.

இதற்கு டேங்கர் லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதும், ஆயில் நிறுவனங்கள் விதிமுறையை மாற்ற மறுத்துவிட்டன. அதைத் தொடர்ந்து நடைபெற்ற புதிய டெண்டரில், நாமக்கல்லை சேர்ந்த 4,800 எல்பிஜி வாகனங்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைத்தது. டெண்டரில் பங்கேற்ற 740 வாகனங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த வாகனங்களை காத்திருப்பு பட்டியலில் வைத்து, பின்னர் வேலைவாய்ப்பு அளிப்பதாக ஆயில் நிறுவனங்கள் கூறியது.

ஆனால், டெண்டர் முடிவடைந்து 9 மாதம் ஆகியும், 740 வாகனங்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் ஜூன் 1ம்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக கடந்த 20ம் தேதி முடிவெடுத்தனர். அதன்படி, இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் ஈடுபட்டனர்.

இதனையடுத்து தற்போது, எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக உத்தரவாதம் அளித்துள்ளது. டேங்கர் லாரி உரிமையாளர்கள் விவகாரத்தை தீர்வுகாண மத்தியஸ்தர் நியமிக்கப்பட்டதால் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories