தமிழ்நாடு

சட்டவிரோத பேனர்கள் விவகாரத்தில் அரசுக்கு கால அவகாசம் வழங்க முடியாது : நீதிமன்றம் அதிரடி!

சட்டவிரோத பேனர்கள் விவகாரத்தில் அரசுக்கு கால அவகாசம் வழங்க முடியாது. அரசு தலைமை வழக்குரைஞர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என சென்னை உயர்நிதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சட்டவிரோத பேனர்கள் விவகாரத்தில் அரசுக்கு கால அவகாசம் வழங்க முடியாது : நீதிமன்றம் அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
premjourn
Updated on

பொது இடங்களில் அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சியினர் மக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைப்பதால் விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் சில சமயங்ககளில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதனை எதிர்த்து சென்னை உயர்நிதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டு நடவடிக்கை குறித்து நீதிமன்றம் விளக்கமும் கேட்டிருந்தது. ஆனால் தமிழக அரசு விளக்கம் அளிக்காமல் காலம் கடத்தி வந்தனர்.

இந்நிலையில் சட்டவிரோத பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைப்பது தொடர்பாக நீதிமன்ற வழங்கிய உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தத் தவறிவிட்டதாகக் கூறி, டிராபிக் ராமசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நேற்றைய தினம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் எம்.நிர்மல் குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து தமிழக அரசு சார்ப்பில் வாதாடிய வழக்கறிஞர் சட்டவிரோத பேனர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய மீண்டும் ஒரு வாரம் கால அவகாசம் கோரியது.

நீதிபதிகள் இதனை ஏற்க மறுத்தனர், தமிழக அரசு தொடர்ந்து கால அவகாசம் கோருவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலை நீடித்தால் உள்துறை செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரித்தனர்.

சாதாரண மனிதர்கள் தவறு செய்தால் தண்டனை வாங்கி கொடுக்கும் அரசு, அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் கால அவகாசம் கோருவது ஏன் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அரசின் செயல்பாடுகளால் மனுதாரரிடம் மன்னிப்பு கோரும் நிலையை நீதிமன்றத்திற்கு தமிழக அரசு ஏற்படுத்திவிட்டதாக வேதனை தெரிவித்த நீதிபதிகள், அரசுக்கு கால அவகாசம் வழங்க முடியாது.

அரசு தலைமை வழக்குரைஞர் நேரில் ஆஜராகி சட்டவிரோத பேனர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சட்டவிரோத பேனர்கள் விவகாரத்தில் அரசுக்கு கால அவகாசம் வழங்க முடியாது : நீதிமன்றம் அதிரடி!

இதனையடுத்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிமன்ற உத்தரவின் பேரில், அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் எஸ். ஆர். ராஜகோபால் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். அப்போது பேசிய நீதிபதிகளிடம், பேனர்கள் அச்சிடுவதை தடுக்க அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து பேனர் அச்சிடும் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக தெரிவித்தார்.

இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், பேனர்கள் அச்சிடுவதை அரசு தான் தடுக்க வேண்டும் என்றும் இது நீதிமன்றத்தின் வேலை இல்லை என தெரிவித்தார். மேலும், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விஐபிகள் வைக்கும் பேனர்களை தினந்தோறும் பார்க்க முடிகிறது என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

பேனர் வழக்கு குறித்து தலைமை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண் தெரிவித்தார். இதனையடுத்து வழக்கு விசாரணையை ஜூலை 1-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

banner

Related Stories

Related Stories