தமிழ்நாடு

தண்ணீர் பிரச்னையை தனியார் பள்ளிகளே தீர்த்துக்கொள்ள வேண்டும் - செங்கோட்டையன் பேட்டி !

மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதால் தண்ணீர் பிரச்னையை தனியார் பள்ளிகளே தீர்த்துக்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தண்ணீர் பிரச்னையை தனியார் பள்ளிகளே தீர்த்துக்கொள்ள வேண்டும் - செங்கோட்டையன் பேட்டி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Bala Vengatesh
Updated on

தமிழகத்தில் சென்னை மட்டுமல்லாது பிற மாவட்டங்களிலும் தண்ணீர் பஞ்சம் அதிகரித்து வருகிறது. ஆனால், இதுதொடர்பாக தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. தண்ணீர் இல்லை என்று சொல்லி பள்ளியை மூடினால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும், தனியார் பள்ளிகளை கண்காணிக்குமாறு பள்ளிக்கல்வித்துறை நேற்று உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தண்ணீருக்காக தனியார் பள்ளிகள் அரசை எதிர்பார்க்க கூடாது. தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதால் தண்ணீர் பிரச்னையை தனியார் பள்ளிகளே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories