தமிழ்நாடு

தமிழக பள்ளிகளில் பாடபுத்தகங்கள் இதுவரை வழங்கப்படவில்லை : பெற்றோர்கள் கடும் அதிருப்தி!

தமிழக பள்ளிகளில் 3,4,5 வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் இதுவரை அச்சாகவில்லை, இதனால் பல பள்ளிகளுக்கு புத்தகம் சென்று சேரவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழக பள்ளிகளில் பாடபுத்தகங்கள் இதுவரை வழங்கப்படவில்லை : பெற்றோர்கள் கடும் அதிருப்தி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தமிழகம் முழுவதும் கடந்த 3-ஆம் தேதி கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளி திறந்த முதல் நாளில் அனைத்து மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தமிழக பள்ளிகல்வித்துறை சார்பாக பள்ளி மாணவர்களுக்கான புத்தகங்கள் தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பாக புத்தகம் வடிவமைக்கப்பட்டு அச்சடிக்கப்பட்டு மாணவர்களுக்கான புத்தகங்கள் வினியோகப்படுகிறது. ஆனால் மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் சார்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டத்தில் 70% பள்ளிகளில் இதுவரை புத்தகங்கள் முறையாக சென்று சேரவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிகல்வித்துறை அதிகாரிகள் அமைச்சர் இதுவரை ஆய்வு செய்யவில்லை என்ற குற்றசாட்டு வைக்கின்றனர். பள்ளிகள் துவங்கி 10 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் புத்தகம் வழங்காதது பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால், புத்தகங்களை விரைந்து வழங்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "பள்ளிகள் திறந்தும் 3,4,5ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களை அனுப்ப இயலாத கையாலாகாத அரசாக தமிழக அரசு உள்ளது. குடிநீர் முதல் கல்வி வரை எதைப்பற்றியும் கவலை இல்லாதவர் கையில் ஆட்சி சிக்கி உள்ளது. இனிமேலாவது துரிதமாகச் செயல்பட்டு பாடப்புத்தகங்கள் கிடைக்க அரசு ஆவன செய்ய வேண்டும். செய்யுமா? " என கேள்வி எழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories