தமிழ்நாடு

அணுக்கழிவுமையம் அமைப்பதை கைவிடாவிட்டால் பெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்: ஞானதிரவியம் எம்.பி

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதை நிறுத்தாவிட்டால் அனைத்துக் கட்சிகளின் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம் அறிவித்துள்ளார்.

அணுக்கழிவுமையம் அமைப்பதை கைவிடாவிட்டால் பெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்: ஞானதிரவியம் எம்.பி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கூடங்குளம் அணு மின் நிலைய வளாகத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க முயற்சித்து வருகிறது மத்திய அரசு. இதற்கு தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றன.

இந்நிலையில், கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதை நிறுத்தாவிட்டால் அனைத்துக் கட்சி , அமைப்புகளைக் கூட்டி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சா.ஞானதிரவியம் எம்.பி கூறியிருப்பதாவது, “அணுக்கழிவுகளின் கதிர்வீச்சு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு வீரியம் கொண்டிருக்கும். இதன் மூலம் இப்பகுதி மக்களின் உயிர், உடல்நலம், குடிநீர், நிலத்தடி நீர், விவசாயம், மீன்வளம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வாழ்வாதாரங்களையும் அழித்து இப்பகுதியை சுடுகாடாக்க அணுக்கழிவு மையம் அமைக்கும் திட்டம் வழிவகுக்கும்.

அணுக்கழிவுமையம் அமைப்பதை கைவிடாவிட்டால் பெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்: ஞானதிரவியம் எம்.பி

இந்த அணுக்கழிவு மையத்தை நிறுவ அரசு முயல்வது தமிழக மக்கள் மேல் மத்திய அரசு கொண்டுள்ள குரோதத்தையே காட்டுகிறது. கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதை நிறுத்தாவிட்டால் அனைத்துக் கட்சி , அமைப்புகளைக் கூட்டி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் அறிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories