தமிழ்நாடு

ஆளில்லா ட்ரோன் மூலம் அனுப்பப்பட்ட ரத்த மாதிரிகள் - மருத்துவ துறையில் புதிய சாதனை!

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆளில்லா சிறிய ரக விமானம் மூலம் ரத்த மாதிரிகளை அனுப்பி சோதனை முன்னோட்டம் வெற்றியைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆளில்லா ட்ரோன் மூலம் அனுப்பப்பட்ட ரத்த மாதிரிகள் - மருத்துவ துறையில் புதிய சாதனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ட்இந்தியாவில் அதிகரித்த வாகன எண்ணிக்கையால் நாளுக்கு நாள் நெரிசல்கள் அதிகரித்து வருகிறது. உடல்நிலை சரியில்லாதவர்களை அம்புலன்ஸில் அழைத்து செல்வது பெரும் போராட்டமாகவே மாறியுள்ளது.

சில நேரங்களில் ரத்த மாதிரிகள், உடல் உறுப்பு பாகங்கள் போன்றவற்றை கொண்டு செல்வதிலும் சிரமம் ஏற்படும். இதனைக் கருத்தில் கொண்டு ஆளில்லா விமானம் மூலம் ரத்த மாதிரிகளை எடுத்து செல்லும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் மதுரா மாவட்டத்தில் உள்ள நண்ட்கானி பகுதியில் இருந்து டெஹ்ரி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம் ரத்த மாதிரிகளை அனுப்பி நடத்தப்பட்ட சோதனை வெற்றியடைந்துள்ளது.

சாலையில் உள்ள இடர்பாடுகள், நெரிசல் இன்றி ஆளில்லா விமானம் மூலம் நண்ட்கானில் இருந்து டெஹ்ரி மாவட்ட மருத்துவமனைக்கு 18 நிமிடங்களில் ரத்த மாதிரி வந்து சேர்ந்துள்ளது. கிட்டதட்ட இந்த இரண்டு மருத்துவனைக்கும், சுமார் 30 கிலோ மீட்டர் இடைவெளியிருக்கும். மணிக்கு 100 கீலோமீட்டர் வேகத்தில் இந்த விமானம் சென்றுள்ளது, சாலை வழியாக சென்றிருந்தால் 60 முதல் 80 நிமிடங்களாகியிருக்கும்.

இந்த சேவையை விரிவுப்படுத்தினால் தொலைத்தூரத்தில் உள்ள கிராம பகுதிகளைச் சேர்ந்த நோயாளிகள் பெரிய அளவில் பயன்பெறுவார்கள். இதனால் இந்திய சுகாதரம் வளர்ச்சியை நோக்கி பயனிக்கும் என சோதனை முயற்சியில் ஈடுபட்ட மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், ஆளில்லா விமானத்தின் மூலம் பாதுகாப்பாக ரத்த மாதிரிகளை எடுத்துச் செல்ல தொடர்ந்து சில சோதனை முயற்சிகள் நடத்தப்பட இருக்கிறது. இந்த ரத்த மாதிரிகள் வைக்கப்படுள்ள பெட்டி குளிர்சாதன வசதியை கொண்டதால் ரத்த மாதிரிகள் வீணாகவில்லை என சோதனை முயற்சி மேற்கொண்ட மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சி.ஆர்.எஸ்.பி. ரோபாட்டிக்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் ஐஐடி முன்னாள் மாணவரைக் கொண்டு இந்த விமானத்தை தயாரித்துள்ளது. விமானம் 500 கிராம் எடையைக் கொண்டு செல்லும் திறன் கொண்டது, இந்த விமானத்தை 50.கி.மீ வரை இயக்கலாம் என நிறுவனம் சார்பில் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories