தமிழ்நாடு

இனி தியேட்டர்களில் 24 மணிநேரமும் படங்கள் திரையிடலாம்: தமிழக அரசு அனுமதி

தமிழகத்தில் இனி 24 மணிநேரமும் திரையரங்குகளில் திரைப்படங்களை திரையிடலாம் என தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் 24 மணிநேரமும் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் இயங்கலாம் என தமிழக அரசு நேற்று அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டது. இதற்கான அறிவிப்பாணை இன்று அரசிதழில் வெளியிடப்பட்டதை அடுத்து, இந்த அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், 24 மணிநேரமும், தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் திரைப்படங்களை திரையிடலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த உத்தரவு அனைத்து மல்டிப்ளக்ஸ் மற்றும் சிறிய தியேட்டர்களுக்கும் பொருந்தும் என தொழில் மற்றும் வேலைவாய்ப்புத்துறை செயலாளர் சுனில் பாலிவால் தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் பகுதிகளில் மட்டும் கடைகள், தியேட்டர்களை செயல்பட அனுமதி அளிப்பது குறித்து காவல்துறை முடிவெடுக்கலாம் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories