தமிழ்நாடு

நீட் தேர்வால் மேலும் ஒரு மாணவி பலி : 2 நாட்களில் மூன்று மாணவிகளின் உயிரைப் பறித்த நீட்!

தேர்வு முடிவுகள் வெளியான இரண்டு நாட்களில் மூன்று மாணவிகளின் உயிரைப் பறித்துள்ளது நீட். விழுப்புரத்தைச் சேர்ந்த மோனிஷா என்ற மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நீட் தேர்வால் மேலும் ஒரு மாணவி பலி : 2 நாட்களில் மூன்று மாணவிகளின் உயிரைப் பறித்த நீட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது முதல், மருத்துவப் படிப்புக் கனவுகள் தகர்ந்துபோய்த் தவித்து வருகிறார்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள்.

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தும் நீட் எனும் அநீதித் தேர்வால் சிதைக்கப்பட்டிருக்கின்றன பெரும்பாலான மாணவர்களின் கனவுகள்.

நீட் தேர்வில் போதுமான மதிப்பெண்கள் பெற முடியாமல் அனிதா, பிரதீபா, சுபஸ்ரீ, ஏஞ்சலின் சுருதி ஆகியோர் ஏற்கனவே தற்கொலை செய்துகொண்டனர்.

நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகமே கொந்தளித்தபோதும், கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தேர்வை நடத்திவருகிறது மத்திய அரசு. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மாதம் நடைபெற்ற நிலையில், இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

நீட் தேர்வால் மேலும் ஒரு மாணவி பலி : 2 நாட்களில் மூன்று மாணவிகளின் உயிரைப் பறித்த நீட்!

நீட் தேர்வு எழுதிய தமிழகத்தைச் சேர்ந்தோரில் சரிபாதிப்பேர் தோல்வியடைந்துள்ளனர். இந்நிலையில், தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் தமிழகத்தைச் சேர்ந்த 3 மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானதையொட்டி திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த மாணவி ரிதுஸ்ரீ தற்கொலை செய்துகொண்டார். அதேபோல, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வைஷியா என்ற மாணவி நீட் தேர்வில் தோல்வியடைந்ததை அடுத்து வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் இன்று நீட் தோல்வியால் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்தவர் மோனிஷா. இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் படித்தார். மருத்துவப் படிப்புக் கனவுடன் நீட் தேர்வு முடிவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அவரின் கனவை சிதைக்கும் வகையில் நீட் தேர்வில் தோல்வி என்றதும் மனவேதனையில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள இரண்டு நாட்களில் மூன்று மாணவிகளின் உயிரை ஆளும் அரசின் தவறான தேர்வு முறை பறித்துள்ளது எனப் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories