தமிழ்நாடு

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அறிவாலயத்தில் உள்ள கலைஞர் சிலை அருகே அவரது உருவப்படத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் 96 வது பிறந்தநாள்:  தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் பிறந்தநாள் தமிழகத்தின் பல இடங்களில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் சிலை அருகே அலங்கரிக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தி.மு.க மூத்த நிர்வாகிகள் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஐ.பெரியசாமி, பொன்முடி, கே.என்.நேரு, ஆ.ராசா, ஜெகத்ரட்சகன், ஏ.வா.வேலு, காந்தி, தயாநிதி மாறன், மாவட்ட செயலாளர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், ஜெ.அன்பழகன் மாதவரம் சுதர்சனம், மாவட்டக் மாவட்ட கழக செயலாளர்கள் கட்சி உறுப்பினர்கள் நிர்வாகிகள் என ஏராளமானோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அருகில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறுசுவை உணவை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் துவங்கி வைத்தார்.

சென்னை மெரினா கடற்கரையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய பிறகு "காலத்தின் நாயகன் கலைஞர்" என்ற தலைப்பில் புத்தகத்தை வெளியிட்டார் அதனை ஆ.ராசா பெற்றுக்கொண்டார் கேட்டுக்கொண்டார்.

banner

Related Stories

Related Stories