தமிழ்நாடு

“அப்போ தேசபக்தர், இப்போ தேசியவாதி” : காந்தியைக் கொன்ற கோட்சேவைக் கொண்டாடும் பா.ஜ.க ?

மத்திய பிரதேசத்தின் பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர், “கோட்சே ஒரு தேசியவாதி. தனது வாழ்க்கை முழுவதும் அவர் தேசம் பற்றி யோசித்தார்” என சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ளார்.

“அப்போ தேசபக்தர், இப்போ தேசியவாதி” : காந்தியைக் கொன்ற கோட்சேவைக் கொண்டாடும்  பா.ஜ.க ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது போபால் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள பாஜக எம்.பி பிரக்யாசிங் தாகூர் “கோட்சே ஒரு தேசபக்தர்” என்று கூறினார். அவரின் இந்த பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். சொந்த கட்சியில் இருந்தே கண்டனம் எழுந்தது. இது பெரும் சர்ச்சையாக மாறி தற்பொழுது சூழல் தணிந்த நிலையில் மீண்டும் பாஜக எம்.எல்.ஏ சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தின் இந்தூர் தொகுதி எம்.எல்.ஏ உஷா தாகூர், “கோட்சே ஒரு தேசியவாதி. தனது வாழ்க்கை முழுவதும் அவர் தேசம் பற்றி யோசித்தார். கோட்சே ஏன் அப்படிப்பட்ட முடிவை எடுத்தார் என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும். நானோ நீங்களோ அது குறித்து கருத்துக் கூறக் கூடாது”என்று கூறியுள்ளார்.

“அப்போ தேசபக்தர், இப்போ தேசியவாதி” : காந்தியைக் கொன்ற கோட்சேவைக் கொண்டாடும்  பா.ஜ.க ?

மத்திய பிரதேச பா.ஜ.க.,வின் துணைத் தலைவராக இருப்பவர் உஷா தாகூர். அவரே சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது இது முதல் முறையல்ல. இது குறித்து மத்திய பிரதேச பா.ஜ.க தரப்பு உஷா தாகூர் பேசிய வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது என்று மறுத்துள்ளனர்.

பிரக்யாசிங் தாகூருக்கே விளக்கம் கேட்டு பா.ஜ.க தலைமை அனுப்பிய காலக்கெடு முடிவடைந்து சில நாட்கள் ஆகிவிட்டன. இதுவரை அது குறித்து பா.ஜ.க தற்போது வரை மவுனம் சாதித்து வருகிறது. இப்போது அடுத்து ஒருவர் இப்படி பேசுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே உத்தரப் பிரதேசத்தில் இந்து மகாசபை சார்ந்தவர்கள் 10ம் வகுப்பு 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு பட்டா கத்தியை வழங்கி சாவர்கரின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

இதுகுறித்து இந்து மகாசபையின் நிர்வாகி அசோக் பாண்டே செய்தியாளர்களிடம் கூறியதாவது, “மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற்று சாவர்கர் கண்ட கனவை நிறைவேற்றியுள்ளார். அவரின் அடுத்த லட்சியமான இந்துக்களை ராணுவமயமாக்கும் முயற்சியில் நாங்கள் இணைந்துள்ளோம். அதனால் மாணவர்களுக்கு கத்திகள் வழங்கி நாங்கள் நிறைவேற்ற முயற்சி செய்துவருகின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.

“அப்போ தேசபக்தர், இப்போ தேசியவாதி” : காந்தியைக் கொன்ற கோட்சேவைக் கொண்டாடும்  பா.ஜ.க ?

பா.ஜ.க மீண்டும் ஆட்சியில் அமர்ந்ததும் சிறுபான்மையினர், தலித் மக்கள் மீதான தாக்குதல் ஒரு பக்கம் அரங்கேறி வருகின்றது. இந்நிலையில், தீவிர இந்துத்துவா கருத்துக்களை மக்கள் மத்தியில் திணித்து பிரிவினை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர் என அரசியல் விமர்சகர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories