தமிழ்நாடு

ஜூன் 2வது வாரத்தில் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை?

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் ஜூன் 2 வாரத்தில் கூடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

ஜூன் 2வது வாரத்தில் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழக சட்டப்பேரவையில் 2019-2020ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பிப்ரவரி 14ல் அதன் மீதான விவாதம் நிறைவடைந்தது.

அதன் பிறகு, நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால், துறைவாரியான மானிய கோரிக்கை விவாதங்கள் ஏதும் நடக்கவில்லை. தற்போது மக்களவை மற்றும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்து முடிவுகள் வெளியாகியுள்ளன

இதனையடுத்து, மாநிலங்களவையில் காலியாக உள்ள 6 உறுப்பினர்களுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், மாநிலங்களவை தேர்தல் வருவதற்கு முன்பு, தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தை முடிக்க திட்டமிட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே ஜூன் மாதம் 2வது வாரத்தில் சட்டமன்றம் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

banner

Related Stories

Related Stories