தமிழ்நாடு

நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் எச்.வசந்த்குமார்!

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதால், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் எச்.வசந்த்குமார் 

நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் எச்.வசந்த்குமார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எச்.வசந்தகுமார்.

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதால், தான் ஏற்கெனவே வகித்து வந்த நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதன்படி இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபாலை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

இதனையடுத்து, தமிழக சட்டப்பேரவையில் 234 உறுப்பினர்கள் இருந்த நிலையில், நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட உள்ளதால் பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 233 ஆக குறைகிறது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எச்.வசந்த்குமார், 8 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த எனக்கு நாங்குநேரி தொகுதி மக்கள் நல்ல ஆதரவை அளித்தனர். நாங்குநேரி தொகுதிக்கான நலத்திட்டங்களை 5 ஆண்டுகளுக்கும் அமல்படுத்த வேண்டியதை நடப்பு ஆட்சியில் 3 ஆண்டுகளில் செய்து முடித்திருப்பதாகவும் கூறினார்.

மேலும், எங்களை வழிநடத்த ராகுல்காந்தியால் மட்டுமே முடியும். அவர்தான் காங்கிரஸின் தலைவராக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories