தமிழ்நாடு

எடப்பாடி ஆட்சி தொடர்வதால் ஏற்படவிருக்கும் பாதிப்புகள் : வாட்ஸ்-அப்பில் வலம்வரும் செய்தி!

எடப்பாடி ஆட்சி தொடர்வதால், தமிழகத்திற்கு ஏற்படப்போகும் பாதிப்புகள் / இழப்புகள் என்னென்ன என்பது குறித்து வாட்ஸ்-அப்பில் ஒரு செய்தி வலம் வருகிறது.

எடப்பாடி ஆட்சி தொடர்வதால் ஏற்படவிருக்கும் பாதிப்புகள் : வாட்ஸ்-அப்பில் வலம்வரும் செய்தி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மத்தியில் பா.ஜ.க மீண்டும் ஆட்சியமைத்து, அதன் அடிமை எடப்பாடி ஆட்சி தொடர்வதால், தமிழகத்திற்கு ஏற்படப்போகும் பாதிப்புகள் / இழப்புகள் என்னென்ன என்பது குறித்து வாட்ஸ்-அப்பில் ஒரு செய்தி வலம் வருகிறது. அது பின்வருமாறு :

* 7 தமிழர் விடுதலை இப்போதைக்கு சாத்தியமில்லை.

* நீட் தேர்விற்கு விலக்கு கிடையாது.

* பொறியியல் படிப்பிற்கும் நீட் தேர்வு கொண்டுவரப்படும்.

* ஹைட்ரோகார்பன் திட்டம் முழுவீச்சில் செயல்படுத்தப்படும்.

* பெட்ரோலிய மண்டலம் திட்டம் செயல்படுத்தப்படும்.

* டெல்டா விவசாய நிலத்தில் கெயில் குழாய் பதிக்கப்படும்.

* சென்னை-சேலம் 8 வழி சாலை திட்டம் செயல்படுத்தப்படும்.

* 8 வழிச் சாலை திட்டத்திற்கு விவசாய நிலங்கள் பிடுங்கப்படும்.

* அதற்கான நிவாரணம் முன்பு அறிவித்தது போல் இருக்காது.

* ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும்.

எடப்பாடி ஆட்சி தொடர்வதால் ஏற்படவிருக்கும் பாதிப்புகள் : வாட்ஸ்-அப்பில் வலம்வரும் செய்தி!

* ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் பெறும்.

* நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்படும்.

* பாதுகாப்பு காரணம் காட்டி முல்லை பெரியாறு நீர்மட்டம் குறைக்கப்படும்.

* கூடங்குளத்தில் மேலும் சில புதிய அணுஉலைகள் நிறுவப்படும்.

* அணுக்கழிவுகள் தமிழகத்திலேயே புதைக்கப்படும்.

* கர்நாடகா மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டப்படும்.

* காவிரியில் இனி தண்ணீர் வரப்போவதில்லை.

* தமிழகத்தில் இராணுவ தளவாட உற்பத்தி மையங்கள் உருவாக்கப்படும்.

* அதனையொட்டி புதிய இராணுவ படைத்தளம் உருவாக்கப்படும்.

* இப்பகுதிகள் பாரத்மாலா திட்டத்தின் கீழ் 6/8 வழி சாலைகளால் இணைக்கப்படும்.

* சாகர்மாலா திட்டத்தின் கீழ் கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் பெரும்.

* CRZ திட்டத்தின் கீழ் கடற்கரையில் கார்ப்பரேட்கள் கட்டுப்படுத்தக்கூடிய புதிய சுற்றுலா தளங்கள் உருவாக்கப்படும்.

* மீனவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு மீன்பிடி தொழில் கார்ப்பரேட் வசம் வழங்கப்படும்.

* மீன்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்ய கார்ப்பரேட்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.

* புதிய துறைமுக திட்டங்கள் உருவாக்கப்பட்டு அதானிக்கு வழங்கப்படும்.

* கன்னியாகுமரி துறைமுக திட்டம் செயல்படுத்தப்படும்.

* தனுஷ்கோடி இராணுவ/ஆன்மீக பகுதியாக மாற்றப்படும்.

* மேலும் பல ஸ்மார்ட் சிட்டிகள் உருவாக்கப்படும்.

* கோவை போன்று சூயஸ் நிறுவனம் தண்ணீர் விநியோகிப்பது பல நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

* பெப்சி போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தமிழக ஆறுகளில் தண்ணீர் எடுக்க அனுமதி அளிக்கப்படும்.

* ஆற்று மணல் கொள்ளை சட்டப்பூர்வமாக நடக்கும்.

* மாவட்டம் தோறும் நவோதயா பள்ளிகள் திறக்கப்படும்.

* அதில் இந்தி கட்டாயப் பாடமாக இருக்கும்.

* அதிகளவில் CBSC பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்படும்.

* தமிழக அரசின் துவக்கப் பள்ளிகள் மூடப்படும்.

* 5, 8 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு முறை கொண்டு வரப்படும்.

* 11, 12 வகுப்புகளுக்கு ஆங்கிலம் அல்லது தமிழை தேர்ந்தெடுக்கும் முறை கொண்டுவரப்படும்.

* மருத்துவ கட்டமைப்பை இந்தியா கொள்ளையடிக்கும் அல்லது நாசப்படுத்தும்.

* பல்கலைக்கழகங்கள் இந்திய அரசு கட்டுப்பாட்டில் செல்லும்.

* பல்கலைக்கழக துணைவேந்தர்களாக வடஇந்திய ஆர்எஸ்எஸ் ஆட்கள் மட்டுமே நியமிக்கப்படுவர்.

* வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் புதிய கல்வி நிறுவனங்களை துவங்க அனுமதி அளிக்கப்படும்.

* உயர் கல்விக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்யும் கட்டுப்பாடு இந்திய அரசிற்கே இருக்கும்.

* பொருளாதார அடிப்படையிலான 10% இடஒதுக்கீடு அனைத்து துறைகளிலும் அமல்படுத்தப்படும்.

* தமிழக அரசு வேலை வாய்ப்புகள் வட இந்தியர்களுக்கு வழங்கப்படும்.

* தமிழகத்தில் ஒன்றிய அரசு வேலைகள் 100% வட இந்தியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

* 69% இடஒதுக்கீடு சரிவர பின்பற்றப்படாது.

* கீழடி வரலாறு மூடி மறைக்கப்படும்.

* புதிய தொல்லாய்வுக்கு அனுமதி கிடையாது.

* கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்படும்.

* அங்கு விவேகானந்தர் அல்லது பாரத மாத சிலை வைக்கப்படலாம்.

எடப்பாடி ஆட்சி தொடர்வதால் ஏற்படவிருக்கும் பாதிப்புகள் : வாட்ஸ்-அப்பில் வலம்வரும் செய்தி!

* கொங்கு பகுதி விவசாய நிலங்கள் ஊடாக கெயில் குழாய் பதிக்கப்படும்.

* விவசாய நிலங்கள் ஊடாக உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைக்கப்படும்.

* கிழக்கு தொடர்ச்சி மலைகள் வெட்டப்பட்டு கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படும்.

* அதானியின் சூரிய மின்சார திட்டம் விரிவாக்கப்படும்.

* புதிய எண்ணெய் கிணறுகள் தோன்றும்.

* தமிழக அரசின் அறநிலையத்துறை பார்ப்பனர்கள் கட்டுப்பாட்டில் செல்லும்.

* ஆர்எஸ்எஸ், இந்துத்துவ அமைப்புகள், ABVP கிளை பரப்பும்.

* அம்மன் கோவில்களில் மஞ்சள் நீக்கப்பட்டு காவி நிறம் ஆக்கிரமிக்கும்.

* தெரு, ஊர் பெயர் மாற்றம் என்ற பெயரில் சமஸ்கிருதம் திணிக்கப்படும்.

* அண்டை மாநிலங்களில் கூலி வேலைக்கு செல்பவர்கள் கொல்லப்படுவது அதிகரிக்கும்.

* பொய் செய்திகள் அதிகளவில் பரப்பப்படும்.

* மதுபான கடைகள் அதிகரிக்கும்.

* வடஇந்தியர் குடியேற்றம் அதிகரிக்கும்.

* கொலை, கொள்ளை குற்ற செயல்கள் அதிகரிக்கும்.

* சிறுபான்மையினர் மீதான குற்ற செயல்கள் அதிகரிக்கும்.

* பசு பாதுகாப்பு பெயரில் இஸ்லாமியர்கள், தலித்துகள் அடித்து கொல்லப்படுவர்.

* காவல்துறையின் முக்கிய பொறுப்புகள் அனைத்தும் வடஇந்திய அதிகாரிகளால் நிரப்பப்படும்.

* தமிழக அரசின் அனைத்து துறை செயலாளர்களும் வடஇந்திய அதிகாரிகளாக இருப்பர்.

* ஒன்றிய அரசின் திட்டங்களை மட்டுமே தமிழக அரசு செயல்படுத்தும்.

* அப்புறம் இவைகளுக்கு எதிராக போராடினால் துப்பாக்கி சூடு நடத்தப்படும்.

எடப்பாடி ஆட்சி தொடர்வதால் ஏற்படவிருக்கும் பாதிப்புகள் : வாட்ஸ்-அப்பில் வலம்வரும் செய்தி!
banner

Related Stories

Related Stories