தமிழ்நாடு

‘TANCET’ நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!

‘TANCET’ தேர்வுக்கு விண்ணப்பிக்க மே -31 ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.

‘TANCET’ நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் மாணவர்கள் முதுநிலை தொழிற்படிப்புகளில் (M.E/M.TECH/M.C.A/M.ARCH) சேர்வதற்காக 'TANCET' நுழைவுத்தேர்வை தமிழக அரசு மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் இணைந்து ஆண்டுதோறும் நடத்தி வருகின்றன.

‘TANCET' நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 8-ம் தேதி தொடங்கி மே 25-ம் தேதி வரை என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 'TANCET' தேர்வுக்கு விண்ணப்பிக்க மே -31 ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.

முதுநிலை படிப்புகளைப் படிக்கவிரும்பும் மாணவர்கள் மாணவர்கள் www.annauniv.edu/tancet2019 எனும் இணையப் பக்கத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

எம்.சி.ஏ, எம்.பி.ஏ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஜூன் 22-ம் தேதியும், எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஜூன் 23-ம் தேதியும் நடைபெறவிருக்கிறது.

‘TANCET' நுழைவுத்தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை மாணவர்கள் தேர்வு செய்து படிக்கலாம்.

banner

Related Stories

Related Stories