தமிழ்நாடு

மாம்பழத்தை நசுக்கி தூக்கி எறிந்த தி.மு.க. தொண்டர்கள் : அறிவாலயத்தில் ஆனந்தம் !

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி வாகை சூடியதை அடுத்து தி.மு.க. தொண்டர்கள் அறிவாலயம் முன்பு கூடி கொண்டாடி வருகின்றனர்.

மாம்பழத்தை நசுக்கி தூக்கி எறிந்த தி.மு.க. தொண்டர்கள் : அறிவாலயத்தில் ஆனந்தம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தி.மு.க. தலைமையிலான கூட்டணி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமோக வெற்றியை அடைந்துள்ளது. இதனையொட்டி, காலை முதலே தி.மு.க. தொண்டர்கள் தி.மு.க தலைமையகமான அண்ணா அறிவாலயம் முன்பு குவிந்து தங்களது மகிழ்ச்சியை பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

இது மட்டுமில்லாமல், தமிழகம் முழுவதும் தி.மு.க. தொண்டர்கள் அங்காங்கே மேல தாளங்களோடு பட்டாசு வெடித்து கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், அண்ணா அறிவாலயம் முன்பு கூடியிருந்த தி.மு.க. தொண்டர்கள், போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பா.ம.க தோல்வியடைந்ததையொட்டி, அக்கட்சியின் சின்னமான மாம்பழங்களை பிழிந்து, நசுக்கி, அதனை தூக்கி எறிந்தனர். தொண்டர்கள் மாம்பழத்தை தூக்கி எறியும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

banner

Related Stories

Related Stories