தமிழ்நாடு

22 தொகுதி இடைத்தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணாமல் இழுத்தடிப்பு : தி.மு.க புகார்

தபால் வாக்குகளை உடனே எண்ண வேண்டும் என தி.மு.க சார்பில் தமிழகத் தேர்தல் ஆணையரிடம் மனுக் கொடுத்துள்ளனர்.

22 தொகுதி இடைத்தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணாமல் இழுத்தடிப்பு : தி.மு.க புகார்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இந்நிலையில், தபால் ஓட்டுகள் எண்ணாமல் இருப்பதால் குளறுபடி நடக்க வாய்ப்புள்ளது என தி.மு.க சார்பில் தேர்தல் ஆணையருக்கு மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து தி.மு.க சட்டப்பிரிவு செயலாளர் கிரிராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது “ சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் 22 தொகுதிகளிலும் தபால் வாக்குகளை எண்ணாமல் இழுத்தடித்து வருகின்றனர். அதிகாரிகளின் உத்தரவின் பேரில் இந்த தபால் ஓட்டுகள் எண்ணாமல் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

1000, 2000 வாக்குகள் குறைவாக இருக்கும் பகுதியில் தபால் ஓட்டுகளை எண்ணாமல் இருப்பதன் மூலம் அ.தி.மு.க சூழ்ச்சி செய்ய நினைக்கிறது. இதன் மூலம் தி.மு.க வெற்றியைத் தடுக்க முயற்சி செய்வதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் நடைபெறும் 22 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவதற்கு முன்பாகவே தபால் ஓட்டுக்களை எண்ண வேண்டும்.” என தி.மு.கவின் மனுவில் கூறப்பட்டது.

தேர்தல் அதிகாரியும் இந்த கோரிக்கை மனுவை ஏற்று மின்னணு வாக்கு எண்ணிக்கை முடிவதற்குள் தபால் ஓட்டுகளை எண்ண உறுதியளித்ததாக கூறப்படுகிறது,

banner

Related Stories

Related Stories