தமிழ்நாடு

தேனியில் ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் எண் மாற்றம் : எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு!

தேனி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கம்பம் அருகே தேவாரம் வாக்கு மையத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் எண் மாறியுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

விவிபேட் (VVPAT) இயந்திரம் 
விவிபேட் (VVPAT) இயந்திரம் 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

7-வது மக்களவை தேர்தல் ஏப்ரல் மாதம் 11ம் தேதி தொடங்கி கடந்த 19ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் வேலூர் தவிர்த்து 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், காலியாக இருந்த 22 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. அத்துடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த 19-ந் தேதியுடன் தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. இந்நிலையில் நாடு முழுவதும் அனைத்து ஓட்டு எண்ணும் மையங்களிலும் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தமிழகத்தில் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளுடன், 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன.

தேனி மாவட்டத்தில் கடந்த மாதத்தில் வேறு ஒரு பகுதியில் இருந்து வாக்கு எந்திரம் கொண்டுவரப்பட்டது. எதிர்க்கட்சிகள் பலர் கண்டித்து தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளனர். அனால் இந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து அந்த தொகுதியில் பல்வேறு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தற்போது தேனி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கம்பம் அருகே தேவாரம் வாக்கு மையத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தின் எண் மாறியுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றச்சாட்டியுள்ளனர். அதனால், அந்த இயந்திரம் மட்டும் எண்ணாமல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories