தமிழ்நாடு

ஸ்டெர்லைட் படுகொலை நினைவேந்தல் : முட்டுக்கட்டை போடும் காவல்துறை!

ஸ்டெர்லைட் படுகொலைகளை மக்கள் நினைவுகூரக்கூடாது என தூத்துக்குடியில் கருப்புத் துணி விற்கவும், ஃப்ளெக்ஸ் வைக்கவும் அறிவிக்கப்படாத தடை விதித்துள்ளனர்.

ஸ்டெர்லைட் படுகொலை நினைவேந்தல் : முட்டுக்கட்டை போடும் காவல்துறை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே 22-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி மக்களைக் குறிவைத்துச் சுட்டது காவல்துறை. அந்தக் கோர நிகழ்வு நிகழ்ந்து ஓராண்டு முடிவடையும் தருவாயில், அதை நினைவுகூரும் அஞ்சலி நிகழ்வுகளுக்கு அனுமதி மறுத்து முட்டுக்கட்டைகள் போட்டு வருகின்றன ஆளுங்கட்சியும், ஆளுங்கட்சியின் ஏவல்துறையான காவல்துறையும்.

துப்பாக்கிச் சூட்டில் இறந்த 13 பேர், தடியடியால் படுகாயமடைந்து உயிருக்குப் போராடி இறந்த 2 பேர் என 15 அப்பாவி மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்து தமது அரச விசுவாசத்தைக் காட்டி வருகிறது காவல்துறை.

போலீசார் அனுமதி அளிக்காததையடுத்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள், நினைவேந்தல் கூட்டம் நடத்த அனுமதி கேட்டு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர். 500 பேர் மட்டுமே கலந்து கொள்ளலாம் என்ற நிபந்தனையுடன் நினைவேந்தல் கூட்டத்திற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது உயர்நீதிமன்ற கிளை. இதையடுத்து நினைவேந்தல் கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், நினைவேந்தல் கூட்டத்தை ஒருங்கிணைக்கும் ஸ்டெர்லைட் போராட்டக்குழுவைச் சேர்ந்தவர்கள் உட்பட 47 மீது மீது இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 107 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது தூத்துக்குடி நகர மற்றும் புறநகர் காவல்துறை.

ஸ்டெர்லைட் படுகொலை நினைவேந்தல் : முட்டுக்கட்டை போடும் காவல்துறை!

மேலும், ஸ்டெர்லைட் படுகொலைகளை மக்கள் நினைவுகூரக்கூடாது என தூத்துக்குடியில் கருப்புத் துணி விற்கவும், ஃப்ளெக்ஸ் வைக்கவும், அதை பிரிண்ட் செய்து கொடுக்கவும் அறிவிக்கப்படாத தடை விதித்துள்ளனர். ஃப்ளெக்ஸ் ப்ரிண்ட் செய்து கொடுத்ததாக தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு பிரிண்டர்ஸின் 9 லட்ச ரூபாய் மதிப்புள்ள இயந்திரத்தை பறிமுதல் செய்துள்ளது அராஜக காவல்துறை.

போஸ்டர், ஃப்ளெக்ஸ் என எதற்கும் ‘படுகொலை’ எனக் குறிப்பிட்ட வாசகங்களை ப்ரிண்ட் செய்துதரக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளதாம். மேலும், நாளை நடைபெறும் ஸ்டெர்லைட் படுகொலை நினைவேந்தல்களில் மக்கள் கூடுவதைத் தடுக்க மிரட்டல் உட்பட பல்வேறு உத்திகளையும் காவல்துறை பயன்படுத்தி வருவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

அரசு நிகழ்த்திய வன்முறை வெறியாட்டத்தால் உயிரிழந்தவர்களுக்கு நினைவேந்தல் நடத்த முயலும் எளிய கிராம மக்கள் மீது, கார்ப்பரேட் விசுவாசத்தால் மீண்டும் வன்முறையைக் கட்டவிழ்த்து விடத் திட்டமிட்டு வருகிறது ஆளுங்கட்சி என தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories