தமிழ்நாடு

வரும் கல்வியாண்டிலிருந்து தமிழக அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு புதிய சீருடை !

தமிழக அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு வரும் கல்வியாண்டு முதல் புதிய சீருடைகள் அறிமுகப் படுத்தபடவுள்ளன.

வரும் கல்வியாண்டிலிருந்து தமிழக அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு புதிய சீருடை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தமிழக அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு வரும் கல்வியாண்டு முதல் புதிய சீருடைகள் அறிமுகப் படுத்தபடவுள்ளன.

இது தொடர்பாக தற்போது வெளியாகியுள்ள அரசாணையில், "1 முதல் 5 வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு கரும்பச்சை நிற கால்சட்டையும், இளம் பச்சை நிற கட்டமிடப்பட்ட மேல் சட்டையும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. அதே போன்று 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு சந்தன நிற கால் சட்டையும் சந்தன நிற கட்டமிடப்பட்ட மேல் சட்டையும், மாணவியருக்கு கூடுதலக சந்தன நிற மேல் கோட்டும் அறிமுகப்படுத்தப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் கல்வியாண்டிலிருந்து தமிழக அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு புதிய சீருடை !

மேலும், சத்துணவு சாப்பிடும் 40 லட்சத்து 66 ஆயிரத்து 217 மாணவ, மாணவியருக்கு இந்த ஆண்டு இலவச சீருடைகள் வழங்கப்பட உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories