தமிழ்நாடு

நெய்வேலி NLC நிர்வாகம் சி.ஐ.டி.யு நிர்வாகியை பணியிடமாற்றம் செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை!

நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தின் சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் துணை தலைவர் திருவரசுவை பணியிடமாற்றம் செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெய்வேலி NLC நிர்வாகம் சி.ஐ.டி.யு நிர்வாகியை பணியிடமாற்றம் செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தின் உள்ள இரண்டாவது மிகப்பெரிய தொழிற்சங்கமாக சிஐடியு தொழிற்சங்கம் இருந்து வருகிறது

என்.எல்.சி நிறுவனத்திற்காக நிலம் பெற்றவர்களுக்கு பணி வழங்க கோரியும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கான பணியிடங்களை முறைப்படுத்த வேண்டும், ஊதிய பிரச்சனை உள்ளிட்ட தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காக சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் என்.எல்.சி நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுத்து வந்தது.

நெய்வேலி NLC நிர்வாகம் சி.ஐ.டி.யு நிர்வாகியை பணியிடமாற்றம் செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை!

இதன் காரணமாக அந்த தொழிற்சங்கத்தின் துணை தலைவர் திருவரசுவை தொடர்ச்சியாக என்.எல்.சி நிறுவனத்திற்குள் பணியிடமாற்றம் செய்து வந்த நிலையில் தற்போது ராஜஸ்தான் மாநிலத்திற்கு பணியிடமாற்றம் செய்ய என்.எல்.சி உத்தரவு பிறபித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி திருவரசு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தொழிற்சங்கத்தை பழிவாங்கும் நோக்கத்துடன், ராஜஸ்தான் மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்த நடவடிக்கை தொழிலாளர் சட்டத்திற்கு விரோதமானது என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, திருவரசுவை பணியிட மாற்றம் செய்ய பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த நீதிபது, பணியிட மாற்றம் செய்து பிறப்பித்த உத்தரவு தொடர்பாக என்.எல்.சி நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜீன் 12 ம் தேதி ஒத்தி வைத்தார்.

banner

Related Stories

Related Stories