தமிழ்நாடு

சீல் வைக்கப்பட்ட பட்டாசு ஆலை வெடித்ததில் 5 பேர் பலி!

சீல் வைக்கப்பட்ட பட்டாசு ஆலையின் அருகே சமையல் செய்ய நெருப்பைப் பற்றவைத்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்பு.

சீல் வைக்கப்பட்ட பட்டாசு ஆலை வெடித்ததில் 5 பேர் பலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

திருநெல்வேலி மாவட்டம் வரகனூரில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில், கடந்த பிப்ரவரி மாதம் 22-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில், ஆலை வெடித்துச் சிதறி 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த கோரமான விபத்தில் பலர் உடல் கருகியும், படுகாயமுற்றும் 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து அந்த ஆலைக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்தது. இந்நிலையில், சீல் வைக்கப்பட்ட ஆலையின் அருகே சமையல் செய்ய நெருப்பைப் பற்றவைத்துள்ளனர்.

அப்போது தீ பரவி ஆலையின் ஒரு பகுதி கட்டடத்திற்குள் வைக்கப்பட்டு இருந்த பட்டாசுகள், வெடித்துச் சிதறியதில், ஆலைக்கு வெளியே தனியார் நிலத்தைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மாங்குடி கிராமப்பகுதியைச் சேர்ந்த ஏழைத் தொழிலாளர்களான கோபால், கனகராஜ், அர்ஜூன், குருசாமி, காமராசர் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

சீல் வைக்கப்பட்ட பட்டாசு ஆலை வெடித்ததில் 5 பேர் பலி!

இந்த தீ விபத்தில் சிகிச்சை பலனின்றி கோபால் உயிரிழந்தார். சீல் வைக்கப்பட்ட ஆலையை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதிசெய்யாத அரசையும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளையும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories