தமிழ்நாடு

சாகித்ய அகாடமி விருது பெற்ற ‘தோப்பில் முகமது மீரான்’ உடல்நலக் குறைவால் காலமானார்!

பிரபல நாவலாசிரியரும், எழுத்தாளருமான தோப்பில் முகமது மீரான் திருநெல்வேலியில் காலமானார்.

சாகித்ய அகாடமி விருது பெற்ற ‘தோப்பில் முகமது மீரான்’ உடல்நலக் குறைவால் காலமானார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

‘சாகித்ய அகாடமி’ விருது பெற்ற, எழுத்தாளரும், நாவல் ஆசிரியருமான ‘தோப்பில் முகமது மீரான்’ இன்று (மே 10) திருநெல்வேலி வீரபாகு நகரில் உள்ள அவரது இல்லத்தில் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 75.

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினத்தைச் சேர்ந்த தோப்பில் முகமது மீரான், 40 ஆண்டுகளுக்கும் மேலாக திருநெல்வேலியில் வசித்து வருகிறார்.

மொழிபெயர்பு நூல்கள், சிறுகதைகள், நாவல் என பல்வேறு புதினங்களை எழுதியுள்ளார் தோப்பில் மீரான். இவருடைய ‘சாய்வு நாற்காலிகள்’ என்ற நாவல் 1997ம் ஆண்டு மத்திய அரசின் ‘சாகித்ய அகாடமி’ விருது பெற்றது.

மறைந்த தோப்பில் மீரானின் உடல் இன்று மாலை 5 மணிக்கு திருநெல்வேலி ரகுமான் பேட்டையில் உள்ள ஜூம்மா மசூதியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இவரது மறைவுக்கு எழுத்தாளர்கள், ஆசிரியர்கள் என பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories