தமிழ்நாடு

4 தொகுதி இடைத்தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் உள்பட 4 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியானது.

4 தொகுதி இடைத்தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இடைத்தேர்தல் நடைபெறும் திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிகளில் வருகிற 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 22 ஆம் தேதி தொடங்குகி 29 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தொகுதிகளில் போட்டியிடுவதற்காக 256 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 30-ம் தேதி நடந்தது.

தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 152 மனுக்கள் ஏற்கப்பட்டன. 104 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வேட்பு மனுக்களை திரும்பப் பெற இன்று (வியாழக்கிழமை) கடைசி நாளாகும் . வேட்புமனுவை திரும்பப்பெற இன்று கடைசி நாள் என்பதால் 15 பேர் தங்களது வேட்புமனுக்களை திரும்ப பெற்றுக்கொண்டனர். இதன்மூலம் 4 தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 137 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்ட பிறகு 4 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இன்று மாலை 3 மணியுடன் வேட்பு மனுக்களை திரும்பப் பெறும் நடவடிக்கைகள் நிறைவு பெற்றன.இதையடுத்து, தேர்தல் நடைபெறும் 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, அரவகுறிச்சி சட்டசபை இடைத்தேர்தலில் 63 பேரும், ஒட்டப்பிடாரத்தில் 15 பேரும், சூலூர் தொகுதியில் 22 பேரும், திருப்பரங்குன்றத்தில் 37 பேரும் போட்டியிடுகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories