தமிழ்நாடு

மதுரை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இருவர் கைது!

மதுரை விமான நிலையத்துக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இருவரிடம் போலீசார் தீவிர விசாரணை.

மதுரை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இருவர் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மீட்பர் ஞாயிறான கடந்த ஏப்., 21-ம் தேதி இலங்கையில் உள்ள தேவாலயங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலின் எதிரொலியாக இந்தியா முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற உளவுத்துறையின் எச்சரிக்கையால் தமிழகத்தில் உள்ள பிரதான போக்குவரத்துத் தளங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

முக்கியமாக மதுரை விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசார் விமான நிலையத்தைச் சுற்றி தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தஞ்சாவூரைச் சேர்ந்த சந்திரசேகரன், பாஸ்கரன் என்ற இருவர் தங்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் குறித்து விசாரித்தால் விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு நடக்கும் என மதுரை விமான நிலையத்துக்கு மிரட்டல் கடிதம் ஒன்று எழுதியுள்ளனர்.

இந்த மிரட்டல் கடிதம் குறித்து பெருங்குடி போலீசாரிடம் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி புகார் கூறியுள்ளார். இதனை விசாரித்த போலீசார் மிரட்டல் விடுத்த இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories