தமிழ்நாடு

மக்கள் எதிர்ப்பை மீறி கெயில் நிறுவனம் குழாய் பதிக்கும் பணி தொடக்கம் : விவசாயிகள் வேதனை!

நாகை மாவட்டம் சீர்காழி அருகே விளைநிலங்களில் குழாய் பதிக்கும் பணிகளை கெயில் நிறுவனம் மீண்டும் தொடங்கியதால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மக்கள் எதிர்ப்பை மீறி கெயில் நிறுவனம் குழாய் பதிக்கும் பணி தொடக்கம் : விவசாயிகள் வேதனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சீர்காழியில் 29 கிலோ மீட்டர் தொலைவுக்கு கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டது. அதன் ஒரு பகுதியாக நாங்கூரில் விவசாய விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றது. விளை நிலங்களில் ராட்சத எரிவாயு குழாய்களை அனுமதிக்க மாட்டோம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து கெயில் நிறுவனத்திற்கு எதிராக கிராம மக்கள் 13-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் மூலம் கெயில் நிறுவனம் பணிகளை நிறுத்துவைத்தது.

அதனை தொடர்ந்து வட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பேச்சுவார்த்தையின் போது கிராம மக்களின் கோரிக்கையை ஏற்கவில்லை என தெரிகிறது. பின்னர் கிராம மக்கள் பேச்சுவார்த்தையை புறக்கணித்தார்கள்.

இந்நிலையில் நேற்றைய தினம் நாங்கூரில் கெயில் நிறுவனத்தின் ஊழியர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எரிவாயு குழாய் பாதிக்கும் வேலையை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.

banner

Related Stories

Related Stories