தமிழ்நாடு

பொன்னமராவதி விவகாரம் : அவதூறாகப் பேசியவர் கைது!

பொன்னமராவதியில் குறிப்பிட்ட சமூகம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாகப் பேசிய விவகாரத்தில் ஒருவரை கைது செய்துள்ளது காவல்துறை. 

பொன்னமராவதி
பொன்னமராவதி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி கிராமத்தில் குறிப்பிட்ட சமூகம் குறித்து அவதூறாகப் பேசி, சமூக வலைதளமான வாட்ஸ்-அப்பில் பரவ -விட்டதை அறிந்த மாற்றுச் சமூகத்தினர், தங்களது சமூகம் குறித்து இழிவாக பேசியவர்களை கைது செய்யக் கோரி கிராம மக்கள் போராட்டத்தில் இறங்கினர்.

இதனையடுத்து, கடந்த 19-ம் தேதியன்று பொன்னமராவதி, குழிபிறை உள்ளிட்ட கிராம மக்கள் சாலையோரம் உள்ள வாகனங்களை அடித்து நொறுக்கியும், ஏராளமான மரங்களை வெட்டிப்போட்டு சாலையை அடைத்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதனால் மாவட்டத்தில் அமைதிக்கு பங்கம் வந்துவிடாமல் காப்பதற்காக புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டனர்.

மேலும், அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமலிருக்க முன்னெச்சரிக்கையாக 40-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக கொத்தமங்கலத்தைச் சேர்ந்த குகன் என்பவரை திருச்சிற்றம்பலம் போலீசார் கைது செய்தனர். மேலும் கீரனூர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்ற நபருக்கு வலைவீசி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories