தமிழ்நாடு

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே காவேரி ஆற்றில் முழ்கி 6 பேர் பலி!

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே 5 வயது பெண் குழந்தை உட்பட 6 பேர் காவேரி ஆற்றில் முழ்கி உயிரிழப்பு.5 பேர் சடலமாக மீட்பு.ஒரு உடல்களை தேடும் பணி தீவிரம்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே காவேரி ஆற்றில் முழ்கி 6 பேர் பலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த பொத்தனூரை சேர்ந்தவர் சரவணன் இதே ஊரில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜோதிமணி இவர்களது இரண்டு மகன்கள் தீபகேஷ் (10), தாரகேஷ் (10) மற்றும் சரவணன் அண்ணன் மகன் ரோகித் ரோகித் (15) உறவினர்களான ரேவதி (35) இவருடைய 5 வயது பெண் குழந்தை என அனைவரும் இன்று காலை பொத்தனூர் அருகே உள்ள காவேரி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர்.

குழந்தைகள் தண்ணீரில் இறங்கி விளையாடி கொண்டிருந்தது. இவர்கள் மற்றொருபுறம் குளித்து கொண்டிருந்தனர். அப்போது குழந்தைகள் நீரில் முழ்கியதை கண்ட ரோகித் சத்தமிட்டுள்ளான் நீரில் மூழ்கிய குழந்தைகளை காப்பாற்ற சரவணன், அவரது மனைவி ஜோதிமணி, உறவினர் தேவி ஆகியோர் முயன்றுள்ளனர்.

ஆற்றில் பல இடங்களில் மணல் அள்ளப்பட்டுள்ளதால் ஆங்காங்கே பெரிய அளவில் பள்ளங்கள் உள்ளன மேலும் எதிர்ப்புறம் கரையில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த டிஎன்பிஎல் காகித நிறுவங்களுக்கு தண்ணீர் எடுப்பதற்காக பெரிய அளவில் குழி வெட்டி ஆழப்படுத்தி உள்ளனர் இதனால் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது என்று பொதுமக்கள் கூறினர் மேலும் குழந்தைகளை காப்பாற்ற சென்றவர்கள் மூழ்கியுள்ளனர். ஒன்றன்பின் ஒன்றாக 5 வயது பெண் குழந்தை உட்பட 6 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

பொதுமக்களும் தீயணைப்பு துறையின்ரும் நீரில் மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுப்பட்டனர். 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சரவணன், ஜோதிமணி, தேவி, தீபகேஷ், தாரகேஷ் என 5 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர்.

பள்ளி விடுமுறை காலம் என்பதால் சரவணன் அவரது உறவினர்கள் மற்றும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு குடும்பத்துடன் காவேரி ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அவர்கள் அனைவரும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பொத்தனூர் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட ஆட்சியர் ஆசியாமரியம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருள் அரசு இவர்கள் சம்பந்த இடத்துக்கு இருக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர் மேலும் ஐந்து வயது பெண் குழந்தை உடலை தேடும் பணியை துரிதப்படுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories