தமிழ்நாடு

வன்முறை நடந்த பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு தேவை: திருமாவளவன் மனு!

அரியலூரின் பொன்பரப்பியில் வாக்குச்சாவடிக்கு வெளியே வன்முறை நடந்ததால் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரியிடம் திருமாவளவன் மனு அளித்தார்

வன்முறை நடந்த பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு தேவை: திருமாவளவன் மனு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொன்பரப்பி பகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்ற ஏப்.,18ம் தேதி வாக்குச்சாவடிக்கு வெளியே வன்முறை நடைபெற்றதால் தலித் சமுகத்தைச் சேர்ந்த மக்கள் வாக்களிக்க முடியாமல் போய்விட்டது.

இதனால் அப்பகுதியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்தக் கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் சத்ய பிரதா சாஹுவிடம் வி.சி.க. தலைவர் திருமாவளவன் மனு அளித்தார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன்,

தேர்தலை நிர்வகிப்பதிலும், அதனை நடத்துவதிலுமே முனைப்பாக உள்ளது தேர்தல் ஆணையம். ஆனால் சட்ட ஒழுங்கை சீர் செய்வதில் மாநில காவல் துறையையே நாடு நிலை உள்ளது. காவல்துறை ஆளுங்கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அதிமுகவின் கூட்டணி கட்சியினர் எந்த ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டாலும் போலீசார் கண்டுகொள்வதில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார்.

பிற்பகல் 2 மணி வரையில் 400க்கும் மேற்பட்ட தலித் சமுகத்தைச் சேர்ந்த வாக்களர்கள் வாக்குப்பதிவு செய்துள்ளனர். அதற்கு பின்னர் பதிவானவை அனைத்து கள்ள ஓட்டாகவே இருந்திருக்கிறது. 280 வாக்களர்களை ஜனநாயக கடமையை ஆற்ற விடாமல் தடுக்கப்பட்டிருக்கிறார்கள் என தேர்தல் அதிகாரியிடம் அளிக்கப்பட்டுள்ளது மனுவில் குறிப்பிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories