தமிழ்நாடு

பொறியியல் கலந்தாய்வு அறிவிப்பு எப்போது? - மாணவர்கள் கடும் அதிருப்தி!

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு குறித்து இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியாகாததால் மாணவர்களும், பெற்றோரும் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.

File image : TNEA Counselling
File image : TNEA Counselling
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

+2 தேர்வு முடிவுகள் நேற்று வெளிவந்த நிலையில், பொறியியல் படிப்புகளுக்காக அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வு குறித்து எவ்வித அறிவிப்பும் இதுவரை வெளியாகாததால் மாணவர்களும், பெற்றோரும் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.

வழக்கமாக, +2 தேர்வு முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வுக்கான பணிகள் துவங்கிவிடும். ஆனால், இந்த ஆண்டு அரசு மற்றும் உயர்கல்வித்துறையில் நிலவும் குழப்பங்கள் காரணமாக கலந்தாய்வை நடத்துவது யார் என்பதே இன்னும் தெளிவாகாமல் இருந்து வருகிறது.

அரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கமிட்டி தலைவர் பதவியில் இருந்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விலகியதையடுத்து, கலந்தாய்வுக்கான பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

பொறியியல் கலந்தாய்வு அறிவிப்பு எப்போது? - மாணவர்கள் கடும் அதிருப்தி!

வேலைவாய்ப்பின்மை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் படிப்புகள் மேல் மாணவர்களுக்கு இருக்கும் ஆர்வம் குறைந்து வருகிறது. இந்நிலையில், அரசும், உயர்கல்வித்துறையும் மாணவர்களின் உயர்கல்வி விஷயத்தில் மெத்தனமாக நடந்துகொள்வது மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories