தமிழ்நாடு

12 லட்சம் முதல்முறை வாக்காளர்கள்!

தமிழகத்தில் 18 முதல் 19 வயதுக்குட்பட்ட முதல்முறை வாக்களிப்போரின் எண்ணிக்கை 12,12,550 என தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 லட்சம் முதல்முறை வாக்காளர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் 18 முதல் 19 வயதுக்குட்பட்ட முதல்முறை வாக்களிப்போரின் எண்ணிக்கை 12,12,550 என தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதையடுத்து, மே 19-ம் தேதி 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.

12 லட்சம் முதல்முறை வாக்காளர்கள்!

இதற்காக, அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மாநில உரிமைகளுக்கும், மக்கள் நலத் திட்டங்களுக்கும் முன்னுரிமை அளித்து தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு மக்களிடம் அபிமானம் பெற்றுள்ளன.

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை தமிழகம் முழுவதும் 5 கோடியே 98 லட்சத்து 69 ஆயிரத்து 758 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 18 முதல் 19 வயதுக்குட்பட்ட முதல்முறை வாக்களிப்போரின் எண்ணிக்கை 12,12,550 என்கிறது தேர்தல் ஆணையம் வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியல். முதல்முறை வாக்களிப்பவர்களைக் கவர எல்லாக் கட்சிகளுமே சமூக வலைதளங்களில் பரப்புரைகளை முடுக்கிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories