விளையாட்டு

1296 நாட்களுக்குப் பிறகு... இந்திய அணியில் சாதனை படைத்த சாய் சுதர்சன்... அவர் செய்த சாதனை என்ன ?

1296 நாட்களுக்குப் பிறகு... இந்திய அணியில் சாதனை படைத்த  சாய் சுதர்சன்... அவர் செய்த சாதனை என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உள்நாட்டு தொடர்களில் கலக்கி வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் ஐபிஎல் தொடரில் வென்ற குஜராத் அணியில் இடம்பிடித்து சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். அதில் சிறப்பாக செயல்பட்ட அவருக்கு இலங்கையின் கொழும்பு நகரில் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 5 ஏ அணிகள் பங்கேற்ற எமர்ஜிங் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய ஏ அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

அங்கும் தனது திறமையை வெளிப்படுத்திய சாய் சுதர்சன் தொடர்ந்து உள்ளுர் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டார்.இதனால் அவருக்கு தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணியில் வாய்ப்பு வழஙகப்பட்டது.அதிலும் சிறப்பாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருதினை வென்றார்.

பின்னர் சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அதிக ரன்கள் குவித்தவருக்கான ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றி அசத்தினார். மேலும் இதனிடையே இங்கிலாந்து கவுண்டி அணியான சர்ரே அணிக்காகவும் சாய் சுதர்சன் சிறப்பாக செயல்பட்டிருந்தார்.

1296 நாட்களுக்குப் பிறகு... இந்திய அணியில் சாதனை படைத்த  சாய் சுதர்சன்... அவர் செய்த சாதனை என்ன ?

இதனால் இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. முதல் போட்டியில் வாய்ப்பு பெற்ற சாய் சுதர்சன் அதில் சோபிக்க தவறியதால் அடுத்த இரு போட்டிகளுக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதில் ஆடிய கருண் நாயரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால் 4-வது டெஸ்டில் மீண்டும் சாய் சுதர்சனுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்திய அணியில் 3-வது இடத்தில் ஆடிய அவர் சிறப்பாக ஆடி 61 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் இந்திய டெஸ்ட் அணியில் புஜாராவுக்கு பிறகு 3-வது இடத்தில் சரியாக ஆடி 1296 நாட்களுக்குப் பிறகு அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். பேட்டிங் செய்ய கடினமாக இந்த ஆடுகளத்தில் சாய் சுதர்சன் அரை சதம் விளாசியுள்ளது அவர் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இதனால் இந்திய அணியில் மேலும் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories