விளையாட்டு

விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3% இடஒதுக்கீடு : தமிழ்நாடு அரசுக்கு பத்மஶ்ரீ அனிதா பால்துரை நன்றி!

விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3% இடஒதுக்கீடு

விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3% இடஒதுக்கீடு : தமிழ்நாடு அரசுக்கு பத்மஶ்ரீ அனிதா பால்துரை நன்றி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை பெரிய மேட்டில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் விவேகானந்தா கல்வி கழகத்தின் நடைபெற்ற பள்ளிகளுக்கிடையேயான 39-வது ஆண்டு மாணவ மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் சிறப்பு விருந்தினராக பத்மஶ்ரீ அனிதா பால்துரை கலந்து கொண்டார்.

சுமார் 25-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து பங்கேற்ற மாணவர்களுக்கு இடையே தடகளம், ரிலே, ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை அனிதா கொடியசைத்து துவக்கி வைத்தார்

விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3% இடஒதுக்கீடு : தமிழ்நாடு அரசுக்கு பத்மஶ்ரீ அனிதா பால்துரை நன்றி!

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, "கடந்த 4-5 ஆண்டுகளாக விளையாட்டுத்துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. ஒலிம்பிக் போட்டியில் தடகளத்தில் பதக்கம் வெல்வது என்பது அவ்வளவு எளிதல்ல. ஒலிம்பிக் போட்டியில் தடகளத்தில் பதக்கம் வெல்வது என்பது அவ்வளவு எளிதல்ல அதையெல்லாம் முறியடித்து பதக்கம் வென்றுள்ளோம்.

விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3% இடஒதுக்கீடு : தமிழ்நாடு அரசுக்கு பத்மஶ்ரீ அனிதா பால்துரை நன்றி!

அதேபோல ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் போதுமான ரசிகர்களின் ஆதரவு கிடைக்கிறது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்காக கடந்த 2-3 ஆண்டுகளாக வீரர்கள் தங்களை தயார்படுத்தி வருகிறார்கள் கடின உழைப்புடன் தொடர்ந்து போராடி வருகிறார்கள். அதே உழைப்பை தொடர்ந்து வந்தால், நிச்சயமாக பதக்கம் வெல்வார்கள்.

விளையாட்டு வீரர்களுக்கு தமிழ்நாடு அரசு, வேலைவாய்ப்பில் 3% இடஒதுக்கீடு வழங்கி உள்ளதால் ஏராளமானனோர் அதிக அளவில் விளையாட்டில் தங்களை ஈடுபடுத்தி கொள்வார்கள். இந்த அருமையான வாய்ப்பு வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories