விளையாட்டு

IPL Brand Value : முதலிடத்தில் தொடரும் CSK... நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்ட மும்பை அணி !

ஐபிஎல் தொடரின் மதிப்பு ரூ.1.35 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக Houllihan Lokey என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.

IPL Brand Value : முதலிடத்தில் தொடரும் CSK... நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்ட மும்பை அணி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.

ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளங்கி வருகின்றன. அதே போல இந்த இரு அணிகளுக்கும் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளமும் இருக்கிறது. இந்த அணிகள் சொந்த மைதானத்தில் விளையாடும்போது அரங்கமே அந்த அணிகளின் வண்ணங்களால் நிறைந்து இருக்கும்.

IPL Brand Value : முதலிடத்தில் தொடரும் CSK... நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்ட மும்பை அணி !

ஆனால், இந்த இரு அணிகளை ஒப்பிட்டால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கே அதிக ரசிகர்கள் இருப்பது தெரியவரும். சென்னை அணி சொந்த மைதானத்தில் விளையாடினாலும் அடுத்த மைதானத்தில் விளையாடினாலும் மைதானம் மஞ்சள் நிறத்தால் நிறைந்திருக்கும். இந்த நிலையில், ஐபிஎல் தொடரின் மதிப்பு ரூ.1.35 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக Houllihan Lokey என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரே ஆண்டில் ஐபிஎல் தொடர் 6.5 சதவிகிதம் வளர்ச்சி பெற்றுள்ளதாகவும், இதன் மதிப்பு ரூ.28 ஆயிரம் கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிஎஸ்கே அணியின் பிராண்ட் வேல்யூ ரூ.1,930 கோடியாகவும்,ஆர்சிபி அணியின் பிராண்ட் வேல்யூ ரூ.1,896 கோடியாகவும், கேகேஆர் அணியின் பிராண்ட் வேல்யூ ரூ.1,805 கோடியாக உளளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது.

banner

Related Stories

Related Stories