விளையாட்டு

முடிவுக்கு வந்த சகாப்தம் : ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் தினேஷ் கார்த்திக் !

தினேஷ் கார்த்திக் தான் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து மைதானத்தை வலம்வந்து ரசிகர்களின் பிரியாவிடையை ஏற்றுக்கொண்டார்.

முடிவுக்கு வந்த சகாப்தம் : ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் தினேஷ் கார்த்திக் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அணியில் இடம்பெறாத காரணத்தால் வர்ணனையாளராக செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது.

ஆனால் கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக பினிஷராக செயல்பட்டு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் தொடர்ச்சியாக அடுத்து வந்த டி 20 உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றார்.

ஆனால், அதன்பின்னர் அவருக்கு அணியில் இடம் மறுக்கப்பட்டது, எனினும் விஜய் ஹசாரே தொடரில் பங்கேற்ற அவர், தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியில் இடம்பிடித்து ஆடி வருகிறார்.

முடிவுக்கு வந்த சகாப்தம் : ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் தினேஷ் கார்த்திக் !

பெங்களுரு அணி ஆரம்பத்தில் தொடர்ந்து தோல்வியைத் தழுவி வரும் நிலையில் அந்த அணிக்கு தினேஷ் கார்த்திக் மட்டும் சிறப்பாக ஆடி வந்தார். அதிலும் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், தனி ஒருவனாக போராடிய தினேஷ் கார்த்திக் 35 பந்துகளில் 83 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இவரின் இந்த ஆட்டத்தின் மூலம் ஊக்கம் பெற்ற பெங்களூரு அணி தொடர்ந்து 6 போட்டிகளில் வெற்றிபெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. எனினும் நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் தோல்வியைத் தழுவி தொடரில் இருந்து வெளியேறியது.

அதனைத் தொடர்ந்து தினேஷ் கார்த்திக் தான் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து மைதானத்தை வலம்வந்து ரசிகர்களின் பிரியாவிடையை ஏற்றுக்கொண்டார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories