விளையாட்டு

"டி20 கிரிக்கெட்டில் ஈகோ இருக்கக்கூடாது"- பந்துவீச்சாளர்களுக்கு பும்ரா கொடுத்த அறிவுரை என்ன ?

டி20 கிரிக்கெட்டில் பவுலர்களுக்கு ஈகோ இருக்கக்கூடாது என பும்ரா கூறியுள்ளார்.

"டி20 கிரிக்கெட்டில் ஈகோ இருக்கக்கூடாது"- பந்துவீச்சாளர்களுக்கு பும்ரா கொடுத்த அறிவுரை என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஐபிஎல் மும்பை அணிக்காக அறிமுகமான பும்ரா அதன்பின்னர் தனது அபார செயல்பாடு காரணமாக இந்திய அணியின் இடம்பிடித்தார். லீமிடெட் போட்டிகளுக்கு மட்டுமே தகுதியான வீரர் என கூறப்பட்ட நிலையில், டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கி அங்கும் தன்னால் ஜொலிக்க முடியும் என்பதை நிரூபித்தார்.

பின்னர் காயத்தால் பாதிக்கப்பட்ட அவர் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்தார்.அந்த தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்ட அவர், அதில் சிறப்பாகவே செயல்பட்டார். தொடர்ந்து ஆசியக்கோப்பை, உலகக்கோப்பை என பும்ராவின் செயல்பாடு இந்திய அணிக்கு மிகமுக்கியமானதாக இருந்தது.

சமீபத்தில் முடிவடைந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் ஆட்டநாயகன் விருது வென்று அசத்தினார். அதோடு ஐசிசி சார்பில் வெளியிடப்பட்டுள்ள டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்து அசத்தி, டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை பும்ரா படைத்தார்.

"டி20 கிரிக்கெட்டில் ஈகோ இருக்கக்கூடாது"- பந்துவீச்சாளர்களுக்கு பும்ரா கொடுத்த அறிவுரை என்ன ?

இந்த நிலையில், தற்போது ஐபிஎல் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த நிலையில், டி20 கிரிக்கெட்டில் பவுலர்களுக்கு ஈகோ இருக்கக்கூடாது என பும்ரா கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "கடந்த சில ஆண்டுகளாக நான் மோசமாக பவுலிங் செய்யும் போது, அந்த வீடியோக்களை பார்க்கும் வழக்கத்தை வைத்திருந்தேன். எங்கு சரியாக செயல்பட்டுள்ளேன், எங்கு தவறு செய்துள்ளேன் என்பதை ஆராய்வேன். பின்னர் அதனை சரி செய்வேன். எல்லாவற்றுக்கும் பயிற்சி தான் முக்கியம்.

நன்றாக ஆடும் பேட்ஸ்மேன்களுக்கு அதிக நேரம் பந்துவீச வேண்டும். அப்போது பேட்ஸ்மேன்கள் எதில் பலமாக இருக்கிறார்கள் என்பதை பார்ப்பேன். சில நேரங்களில் பிட்ச் கொஞ்சம் ஸ்லோவாக இருக்கும் போது, யார்க்கரை வீச வேண்டிய அவசியமில்லை. ஸ்லோயர் பால் மற்றும் பவுன்சரை பயன்படுத்தலாம்.

ஆட்டம் எப்படி மாறுகிறது என்பதை ஆராய்ந்து, என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்க வேண்டும். டி20 கிரிக்கெட்டில் பவுலர்களுக்கு ஈகோ இருக்கவே குடாது. 145 கிமீ வேகத்தில் பவுலிங் செய்தாலும், பிட்ச் ஸ்லோ பால்களுக்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில், அதனை செய்ய வேண்டும். அதனால் அனைத்தையும் பார்த்து கவனித்து செயல்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories