விளையாட்டு

CSK அணியில் கேப்டன் மாற்றம் ஏன்? : பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளமிங் கூறும் விளக்கம் என்ன?

நடப்பு ஐ.பி.எல் தொடரில் CSK அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

CSK அணியில் கேப்டன் மாற்றம் ஏன்? : பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளமிங் கூறும் விளக்கம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நடப்பாண்டு ஐ.பி.எல் தொடர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியனான சென்னை அணியும், பெங்களூர் அணிகள் சேப்பாக்கம் பலப்பரீட்சை செய்வதால் இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தோனி விளையாடும் கடைசி ஐ.பி.எல் தொடர் இது என கூறப்படுவதால் CSK ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் அனைவரும் மிக ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

அது மட்டுமல்லாமல் அண்மையில் தோனி எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் புதிய சீசன் மற்றும் புதிய பணியை நோக்கி காத்திருப்பதாக பதிவிட்டிருந்தார். அது மிகவும் ட்ரெண்டிங் ஆன நிலையில் இன்றைய தினம் அதற்கான விடை கிடைத்து இருக்கிறது.

சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்படுவார் என அணி நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. போட்டிக்கு முன்னதாக தொடரில் பங்கேற்றுள்ள அணிகளின் கேப்டன்கள் போட்டோஷூட் நடைபெற்றதில், சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் புகைப்படம் இருந்தது. இதனை தொடர்ந்து அணியின் கேப்டனாக செயல்படுவார் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 13 ஆண்டு காலம் சென்னை அணிக்கு தோனி தலைமை தாங்கி நிலையில் தற்போது ருதுராஜ் கேப்டன் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சென்னை அணியில் கேப்டன் மாற்றம் குறித்து பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்பிங் விளக்கம் அளித்துள்ளார். அதில், அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தோனி இந்த முடிவை எடுத்துள்ளார். அணி சார்பில் கேப்டன்சி குறித்த பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. அதில் ருதுராஜ் சிறப்பாக செயல்பட்டார்.

மேலும் புதிய கேப்டன் தேர்வு செய்ய இதுவே சரியான தருணம் என தோனி கருதியதன் அதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காயத்தில் இருந்து தோனி முழுமையாக மீண்டு சிறப்பாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்" என தெரிவித்துள்ளார்.

தோனியின் கடைசி ஐ.பி.எல் சீசனாக இது இருக்கும் என தொடர்ந்து கூறப்பட்டு வரும் நிலையில், அவரது ஹெலிகாப்டர் சிக்சர் ஷாட்டை காண ரசிகர்கள் அனைவரும் மிக ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories