விளையாட்டு

முக்கிய போட்டிகளுக்கு கூட ரசிகர்கள் இல்லை, PSL தொடர் தடுமாற்றத்தில் உள்ளது- பாக். முன்னாள் வீரர் கருத்து!

உண்மையில் இப்பொழுது பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் தடுமாற்றத்தில் இருக்கிறது என அந்நாட்டு முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.

முக்கிய போட்டிகளுக்கு கூட ரசிகர்கள் இல்லை, PSL தொடர் தடுமாற்றத்தில் உள்ளது- பாக். முன்னாள் வீரர் கருத்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.

ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் ஐபிஎல் ரீதியிலான லீக் தொடர்கள் தொடங்கப்பட்டது. அந்த வகையில் பாகிஸ்தான் பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) என்ற பெயரில் லீக் தொடரை ஒன்றை தொடங்கியது. ஆனால், அது ஐபிஎல் போல மிகப்பெரிய வெற்றியை பெறாமல் சோபித்தது.

தற்போது பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிளே ஆஃப் போன்ற முக்கிய போட்டிகளுக்கு கூட அங்கு ரசிகர்கள் வராததை விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் ஒன்பதாவது சீசனின் ப்ளே ஆப் சுற்று போட்டிகள் அனைத்தும் கராச்சியில் நடைபெற்று வருகிறது.

முக்கிய போட்டிகளுக்கு கூட ரசிகர்கள் இல்லை, PSL தொடர் தடுமாற்றத்தில் உள்ளது- பாக். முன்னாள் வீரர் கருத்து!

ஆனால், இந்த போட்டி நடைபெறும் மைதானங்கள் பெரும்பாலும் ரசிகர்கள் இல்லாமல் காலியாக உள்ளது. இதன் காரணமாக இறுதிப்போட்டி நடைபெறும் மைதானம் மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், உண்மையில் இப்பொழுது பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் தடுமாற்றத்தில் இருக்கிறது என அந்நாட்டு முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர், " கராச்சியில் முக்கிய பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் நடைபெறுகிறது. ஆனால், ரசிகர்கள் கூட்டம் இல்லாமல் மைதானம் காலியாக இருந்தது மோசமான அனுபவத்தை கொடுத்தது. மக்கள் கூட்டம் இல்லை என்பது பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் தடுமாற்றத்தில் இருப்பதை காட்டுகிறது. இது குறித்து பயமாக இருக்கிறது. உலகில் நடக்கும் பிற டி20 லீக்குகளில் வீரர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது. சர்வதேச வீரர்களும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக, அதற்கு முன்பாக நடக்கும் பாகிஸ்தான் சூப்பர் லீக்தொடரில் விளையாடாமல் ஓய்வெடுக்க சென்று விடுகிறார்கள்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories