விளையாட்டு

ஹர்ஷா போக்ளேவின் கருத்தால் அதிருப்தி : வர்ணனை அறையில் இருந்து வெளியேறிய பீட்டர்சன்... காரணம் என்ன ?

ஹர்ஷா போக்ளேவின் கருத்தால் வர்ணனையில் இருந்த இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் வர்ணனை அறையில் இருந்து வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹர்ஷா போக்ளேவின் கருத்தால் அதிருப்தி : வர்ணனை அறையில் இருந்து வெளியேறிய பீட்டர்சன்... காரணம் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து இந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.,

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 436 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலமாக இங்கிலாந்து அணியை விட 190 ரன்களை முன்னிலை பெற்றது.

அதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி தனது இரண்டாம் இன்னிங்ஸில் 420 ரன்களை குவித்தது. இந்த இன்னிங்க்ஸில் சிறப்பாக ஆடிய இங்கிலாந்து வீரர் ஓலி போப் 196 ரன்கள் விளாசினார். அவர் தனது ஆட்டத்தில் அடிக்கடி இடதுபக்கம் திரும்பி சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டார்.

ஹர்ஷா போக்ளேவின் கருத்தால் அதிருப்தி : வர்ணனை அறையில் இருந்து வெளியேறிய பீட்டர்சன்... காரணம் என்ன ?

இந்த நிலையில், இந்த ஆட்டத்தில் ஹர்ஷா போக்ளேவின் கருத்தால் வர்ணனையில் இருந்த இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் வர்ணனை அறையில் இருந்து வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்றாம் நாள் ஆட்டத்தின் இறுதி செஷனின் போது ஓலி போப் இடதுபக்கம் திரும்பி சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டதை வர்ணனை அறையில் இருந்த ஹர்ஷா போக்ளே பந்துவீச்சாளர்களுக்கு அளிக்கப்படும் அநீதி என விமர்சித்திருந்தார்.

மேலும், இதே போன்று பந்துவீச்சாளர்கள் முன்கூட்டியே தெரிவிக்காமல் வேறு கையில் பந்துவீசினால் அதனை ஏற்றுகொள்வார்களா ? என்றும், இதனால் அதன் விதிகளில் மாற்றம் கொண்டு வந்து, இந்த ஷாட்டை தடை செய்ய வேண்டும் எனவும் ஹர்ஷா போக்ளே கூறினார்.

ஆனால், ஹர்ஷா போக்ளேவுடன் அதே அறையில் வர்ணனை செய்துகொண்டிருந்த பீட்டர்சன், ஹர்ஷா போக்ளேவின் கருத்தால் அதிருப்தி அடைந்து வர்ணனை அறையில் இருந்து வெளியேறினார். இந்த விவகாரம் பீட்டர்சன் ரசிகர் ஒருவருக்கு அளித்த பதிலின் மூலம் வெளிவந்துள்ளது.

banner

Related Stories

Related Stories