விளையாட்டு

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் : பதக்கபட்டியலில் முதலிடத்தில் தமிழ்நாடு.. அசத்தும் தமிழர்கள் !

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் தற்போதுவரை பதக்கபட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளது.

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள்  : பதக்கபட்டியலில் முதலிடத்தில் தமிழ்நாடு.. அசத்தும் தமிழர்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் விளையாட்டு துறையிலும் தமிழ்நாட்டை முன்னிலைக்கு கொண்டுசெல்ல பல்வேறு முயற்சிகள் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக உலகமே வியக்கும் வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ்ஷிப் போட்டியும் சென்னையில் வெகுசிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், தற்போது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை நடத்தும் வாய்ப்பு தமிழ்நாட்டுக்கு கிடைத்துள்ளது.

அதன்படி கடந்த 19-ம் தேதி சென்னை நேரு விளையாட்டு அரங்கில், கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் தொடங்கியது. கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் தமிழ் நாட்டில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நடைபெற்று வருகின்றன.

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள்  : பதக்கபட்டியலில் முதலிடத்தில் தமிழ்நாடு.. அசத்தும் தமிழர்கள் !

இந்த விளையாட்டு போட்டிகளில் தற்போதுவரை பதக்கபட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 4 தங்கம் உள்ளிட்ட 6 பதக்கங்களை வென்று தமிழ்நாடு அசத்தியுள்ளது. பாரம்பரிய யோகா பிரிவில் 64.75 என்ற புள்ளிக் கணக்கில் தமிழ்நாட்டை சேர்ந்த நவியா அசத்தல் வெற்றி பெற்றார்.

அதேபோல் தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி பல்கலைக்கழக மைதானத்தில் நடத்தப்பட்ட வாள் வீச்சு போட்டியில் தமிழ்நாடு வீரர் அர்லின் 15-14 என்ற புள்ளி கணக்கில் தங்கப் பதக்கத்தை தன்வசமாக்கி வெற்றி பெற்றார்.

யோகாசனம் ஆடவர் ரிதமிக் இரட்டையர் பிரிவு போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேவேஷ், ஷர்வேஷ் இணை ஒரு தங்கத்தையும், வாள்வீச்சு போட்டியில் அன்பிளெஸ் ஒரு தங்கத்தையும் வென்றனர். இதுவரை தமிழ்நாடு அணி 6 தங்கப் பதக்கங்களை வென்ற நிலையில், மகளிர் கபடி போட்டியில் ஒரு பதக்கம் ஸ்கொஷ் போட்டியில் 5 பதக்கம் என மேலும் 6 பதக்கங்களை தமிழ் நாடு அணி உறுதி செய்துள்ளது...

banner

Related Stories

Related Stories