விளையாட்டு

"விராட் கோலி, ரோஹித்கே அணியில் கடும் போட்டி இருக்கிறது" - முன்னாள் ஜாம்பவான் வீரர் கருத்து !

இந்திய அணியில் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படுவதால் அணியில் ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது என முன்னாள் மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் கிளைவ் லாயிட் கூறியுள்ளார்.

"விராட் கோலி, ரோஹித்கே அணியில் கடும் போட்டி இருக்கிறது" - முன்னாள் ஜாம்பவான் வீரர் கருத்து !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. அதனைத் தொடர்ந்து டி20 உலகக்கோப்பை நடைபெறும் நிலையில், அந்த தொடருக்கு சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா இடம்பெறுவார்களா என்ற கேள்வி எழுந்தது.

சமிபத்தில் நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் கூட இளம்வீரர்கள் அடங்கிய இந்திய அணியே பங்கேற்றது. இதனால் இந்தியில் அணியில் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மாவின் டி20 பயணம் முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது.

ஆனால், அவர்களின் டி20 பயணம் குறித்து அவர்களே முடிவே செய்துகொள்ளலாம் என பிசிசிஐ சார்பில் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் இந்த இருவரும் அணியில் இடம்பிடித்தனர். இதனால் அடுத்த உலகக்கோப்பை தொடரிலும் அவர்கள் இடம்பெறுவர் என்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

"விராட் கோலி, ரோஹித்கே அணியில் கடும் போட்டி இருக்கிறது" - முன்னாள் ஜாம்பவான் வீரர் கருத்து !

இந்த நிலையில், இந்திய அணியில் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படுவதால் அணியில் ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது என முன்னாள் மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் கிளைவ் லாயிட் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர்,"இந்திய அணியில் சிறப்பாக வீரர்கள் இருக்கிறார்கள். சிறந்த அணியை தேர்வு செய்யவேண்டும் என்றால் அந்த அணி இளம் வீரர்களால் மட்டும் நிறைந்திருக்கக் கூடாது. உங்களுக்கு அனுபவமும் தேவை.

விராட் கோலி சிறந்த வீரர்களில் ஒருவர். ரோஹித் சர்மா நல்ல கேப்டன். இவர்களுடன் சில இளம் வீரர்களையும் தேர்வு செய்யலாம். இந்திய அணியில் இளம் வயதுடைய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு அதிக வயதுடைய வீரர்களை மேலும் சிறப்பாக ஆடும்படி படி தூண்டுகிறார்கள். சிறப்பான அணி என்றால் அது இந்திய அணியை போலத்தான் இருக்க வேண்டும். இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி வலுவானதாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்"என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories