விளையாட்டு

”பாண்டியாவை போல கில்லும் குஜராத் அணியிலிருந்து வெளியேறக்கூடும்” - முகமது சமி பரபரப்பு கருத்து !

ஹர்திக் பாண்டியாவை போல சுப்மான் கில்லும் குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து வெளியேறக்கூடும் என இந்திய வீரர் முகமது சமி கூறியுள்ளார்.

”பாண்டியாவை போல கில்லும் குஜராத் அணியிலிருந்து வெளியேறக்கூடும்” - முகமது சமி பரபரப்பு கருத்து !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சமீப காலமாக இந்தியாவின் தவிர்க்கமுடியாத வீரராக இளம்வீரர் சுப்மான் கில் உருவாகியுள்ளார். கவாஸ்கர்,சச்சின், கோலி என ஒவ்வொரு தலைமுறைக்கும் சிறப்பாக ஒரு மட்டைவீச்சாளரை இந்தியா தொடர்ந்து உருவாகிவரும் நிலையில், கோலிக்கு பின்னர் அந்த இடத்துக்கு வருவது யார் என்ற கேள்வி எழுந்தது.

தற்போதைய நிலையில், கோலிக்கு பின் இந்திய மட்டைவீச்சை வழிநடத்துபவராக சுப்மான் கில் இருப்பார் என பல்வேறு முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற யு-19 போட்டியில் சிறப்பான செயல்பட்ட கில் அனைவரையும் கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடிவந்த கில் கடந்த 2019-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான தொடர் மூலம் இந்திய அணிக்காக அறிமுகம் ஆனார்.

அதன் பின்னர் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அணியில் தனது இடத்தை தக்கவைத்த கில், மூன்று விதமான கிரிக்கெட் தொடரிலும் இந்தியாவின் தவிர்க்கமுடியாத வீரராக மாறியுள்ளார். அதிலும் கடந்த ஜனவரி மாதம் நியூசிலாந்துக்கு அணிக்கு எதிரான போட்டியில் 200 ரன்கள் குவித்து சாதனை படைத்ததோடு, அதே மாதம் டி20 போட்டியிலும் சதம் விளாசி இளம்வயதில் மூன்று விதமான போட்டிகளிலும் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

”பாண்டியாவை போல கில்லும் குஜராத் அணியிலிருந்து வெளியேறக்கூடும்” - முகமது சமி பரபரப்பு கருத்து !

அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாகவும் சுப்மான் கில் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், ஹர்திக் பாண்டியாவை போல சுப்மான் கில்லும் குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து வெளியேறக்கூடும் என இந்திய வீரர் முகமது சமி கூறியுள்ளார்.

இது குறித்துப் பேசியுள்ள முகமது சமி, ”அணியில் யார் இருக்கிறார்கள், யார் வெளியேறுவார்கள் என்பது முக்கியமல்ல. இருந்த ஹர்திக் பாண்டியா இரண்டு சீசன்களில் இறுதிப்போட்டிக்கு குஜராத்தை அழைத்துச் சென்றார். 2022ல் குஜராத் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆனால் அவர் தற்போது வெளியேறியுள்ளார். அணிக்காக ஹர்திக் பாண்டியா வாழ்நாள் முழுவதும் விளையாட ஒப்பந்தம் செய்யவில்லையே? தற்போது சுப்மன் கில் கேப்டனாக உள்ளார். எனினும் ஒருநாள் அவரின் அணியிலிருந்து வெளியேறலாம்.

யார் அணியிலிருந்து வெளியேறுகிறார் என்பது முக்கியமல்ல, ஒரு அணி பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து தரப்பிலும் சமநிலையில் இருக்கிறதா என்பதுதான் முக்கியம்.கேப்டனாக இருக்கும் போது ஒருவருக்கு அழுத்தம் அதிகம் காணப்படும். அந்த சூழ்நிலையை ஒருவர் எப்படி கையாளுகிறார் என்பதைப் பொறுத்து தான் வெற்றி தோல்வி அமையும். எனினும் சுப்மன் கில் அணியில் நல்ல அனுபவத்தை பெறுவார் என்று கருதுகிறேன்” என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories