விளையாட்டு

மைதானத்தில் பெய்த பொம்மை மழை : கால்பந்து மைதானத்தை நிறைத்த பொம்மைகள் - நெகிழ்ச்சி செயலின் காரணம் என்ன ?

ரியல் பெட்டிஸ் - ரியல் சோசைடட் அணிகள் மோதிய ஆட்டத்தின் இடைவேளையின் போது, ரசிகர்கள் தங்கள் கொண்டு வந்திருந்த பொம்மைகளை மைதானத்தில் தூக்கி வீசினர்.

மைதானத்தில் பெய்த பொம்மை மழை : கால்பந்து மைதானத்தை நிறைத்த பொம்மைகள் - நெகிழ்ச்சி செயலின் காரணம் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலகம் முழுவதும் பிரபலமான விளையாட்டு என்றால் அது கால்பந்துதான். இந்த கால்பந்தில் உச்சபட்ச தொடர்களாக இங்கிலாந்து நடைபெறும் பிரீமியர் லீக் தொடரும், ஸ்பெயினின் லா லிகா தொடரும் திகழ்ந்து வருகிறது. இந்த லா லிகா தொடர் ஸ்பெயினின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது.

இந்த லா லிகா தொடரில் பங்கேற்கு முக்கிய அணிகளில் ஒன்று ரியல் பெட்டிஸ். இந்த அணியின் சொந்த மைதானமான Estadio Benito Villamarín-வில் கிறிஸ்துமஸ் தினத்துக்கு முன்னர் இறுதியாக நடைபெறும் போட்டிகளில் ஒரு மரபு பின்பற்றப்படுகிறது.

அதாவது கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாட வசதி இல்லாத ஏழை குழந்தைகளுக்கு அளிக்கும் வகையில் கிறிஸ்துமஸ் தினத்துக்கு முன்னர் இறுதியாக Estadio Benito Villamarín மைதானத்தில் நடைபெறும் போட்டியில் ரசிகர்கள் தங்கள் கொண்டுவரும் பொம்மைகளை மைதானத்தில் வீசுவர். இந்த பொம்மைகள் ஏழை குழந்தைகளுக்கு அளிக்கப்படும்.

அந்த வகையில் நேற்று Estadio Benito Villamarín மைதானத்தில் ரியல் பெட்டிஸ் - ரியல் சோசைடட் அணிகள் மோதிய ஆட்டத்தின் இடைவேளையின் போது, ரசிகர்கள் தங்கள் கொண்டு வந்திருந்த பொம்மைகளை மைதானத்தில் தூக்கி வீசினர். இந்த வகையில் சுமார் 19,000 பொம்மைகள் கிடைக்கப்பட்டதாக ரியல் பெட்டிஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக 35 சென்டிமீட்டருக்கும் குறைவாகவும் பேட்டரிகள் இல்லாத பொம்மைகளை மைதானத்துக்கு கொண்டுவருமாறு ரியல் பெட்டிஸ் அணி நிர்வாகம் ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories