விளையாட்டு

2 கோடிக்கு ஏலம் போன இந்திய வீராங்கனை.. WPL தொடரில் ஆடும் தமிழ்நாடு வீராங்கனை.. ஏலத்தின் முழு விவரம் !

2 கோடிக்கு ஏலம் போன இந்திய வீராங்கனை.. WPL தொடரில் ஆடும் தமிழ்நாடு வீராங்கனை.. ஏலத்தின் முழு விவரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.

இதன் வெற்றியைத் தொடர்ந்து இந்த ஆண்டு மகளிருக்கான ஐபிஎல் தொடர் அறிமுகம் செய்யப்பட்டது. டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, உத்தரபிரதேச வாரியர்ஸ் என 5 அணிகள் இந்த தொடரில் களமிறங்கின.

இதில் மும்மை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்த ஆண்டுக்கான மகளிர் ஐபிஎல் தொடருக்கான ஏலம் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணியில் இடம்பெறாத 20 வயதான பஞ்சாப் வேகப்பந்து வீச்சாளர் கஷ்வீ கௌதமை குஜராத் ஜெயண்ட்ஸ் அணி ரூ.2 கோடிக்கு வாங்கியது.

2 கோடிக்கு ஏலம் போன இந்திய வீராங்கனை.. WPL தொடரில் ஆடும் தமிழ்நாடு வீராங்கனை.. ஏலத்தின் முழு விவரம் !

மேலும் இந்திய அணியில் இன்னும் அறிமுகமாகாத மற்றொரு இந்திய கிரிக்கெட் வீராங்கனையான கர்நாடக வீரர் விருந்தா தினேஷை UP வாரியர்ஸ் 1.3 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது. மேலும், தமிழ்நாடு அணிக்கு ஆடும் கீர்த்தனா பாலகிருஷ்ணனை மும்பை இந்தியன்ஸ் அணி அடிப்படை விலையான ரூ.10 லட்சத்திற்கு வாங்கியுள்ளது.

வெளிநாட்டு வீராங்கனைகளில், ஆஸ்திரேலியா வீராங்கனையான அன்னாபெல் சதர்லேண்ட் அதிகபட்ச ஏலமான ரூ. 2 கோடிக்கும், மற்றொரு ஆஸ்திரேலியா வீராங்கனை லிட்ச்ஃபீல்ட் ரூ.1 கோடிக்கும், தென்னாப்பிரிக்காவின் ஷப்னிம் இஸ்மைல் ரூ.1.20 கோடிக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். அதே நேரம் டி20 பேட்ஸ்மேன் தரவரிசையில் 7-ம் இடத்தில உள்ள இலங்கை வீராங்கனை சமாரி அத்தபதுவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories