விளையாட்டு

"ஷாகிப் அல் ஹசன் இலங்கை வந்தால் அவர் மீது கற்கள் வீசப்படும்" - ஏஞ்சலோ மேத்யூஸின் சகோதரர் மிரட்டல் !

ஷாகிப் இலங்கை வந்தால் அவர் மேத்யூ கற்கள் வீசப்படும் என மேத்யூஸின் சகோதரர் மிரட்டல் விடுத்துள்ளார்.

"ஷாகிப் அல் ஹசன் இலங்கை வந்தால் அவர் மீது கற்கள் வீசப்படும்" - ஏஞ்சலோ மேத்யூஸின் சகோதரர் மிரட்டல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

டெல்லியில் நடைபெற்ற உலகக்கோப்பை லீக் போட்டியில் இலங்கை அணி மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இதில் வங்கதேச அணி டாஸ் வென்ற நிலையில், பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தது.

இதில் நான்காவது விக்கெட்டாக இலங்கை வீரர் சமரவிக்ரமா ஆட்டமிழந்த நிலையில், அடுத்த வீரராக ஏஞ்சலோ மேத்யூஸ் களமிறங்கினார். ஆனால், அவரின் ஹெல்மெட்டில் ஸ்டிராப்ஸ் சரியில்லாத காரணத்தால் மைதானத்துக்கு வந்து வேறு ஹெல்மெட்டை கேட்டுள்ளார். அதன்படி இலங்கை வீரர் ஒருவர் ஹெல்மெட்டை கொடுத்துள்ளார்.

இதனால் அவர் தாமதமாக பேட்டிங் செய்ய வந்ததால் இது குறித்து வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் நடுவரிடம் புகாரளிக்க விதிப்படி ஏஞ்சலோ மேத்யூஸ் டைம் அவுட் என்ற வகையில் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் சர்வதேச அரங்கில் இந்த முறையில் ஆட்டமிழந்த முதல் வீரராக மேத்யூஸ் மாறியுள்ளார்.

"ஷாகிப் அல் ஹசன் இலங்கை வந்தால் அவர் மீது கற்கள் வீசப்படும்" - ஏஞ்சலோ மேத்யூஸின் சகோதரர் மிரட்டல் !

வங்கதேச அணியின் இந்த செயலுக்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஷாகிப் இலங்கை வந்தால் அவர் மேத்யூ கற்கள் வீசப்படும் என மேத்யூஸின் சகோதரர் மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து பேசிய ஏஞ்சலோ மேத்யூஸின் சகோதரர் ட்ரவின் மேத்யூஸ், "கிரிக்கெட் ஒரு ஜெண்டில்மேன் விளையாட்டு. இதில் ஷாகிப் அல் ஹசனின் செயல் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. அவரிடம் கொஞ்சம் கூட மனிதாபிமானமும் இல்லை, விளையாட்டு வீரனுக்கு உரிய திறனும் இல்லை. ஷாகிப் இலங்கைக்கு சர்வதேச போட்டிகள் அல்லது வேறு போட்டிகளில் விளையாட வந்தால் அவர்மீது கற்கள் வீசப்படும். அதோடு அவர் ரசிகர்களது எரிச்சலை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அவர் இங்கு விளையாட வருவதை நாங்கள் விரும்பவில்லை" எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories