விளையாட்டு

" நான் அவருடன் ஒப்பிடத் தகுந்தவன் அல்ல" - சச்சினின் சரித்திர சாதனையை சமன் செய்த விராட் கோலி பேச்சு !

நான் சச்சினுடன் ஒப்பிடத் தகுந்தவன் அல்ல என விராட் கோலி கூறியுள்ளார்.

" நான் அவருடன் ஒப்பிடத் தகுந்தவன் அல்ல" - சச்சினின் சரித்திர சாதனையை சமன் செய்த விராட் கோலி பேச்சு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது.

இந்தியாவில் நடைபெற்றுவரும் இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அபாரமாக செயல்பட்டு வருகிறது. இது வரை ஆடிய 8 போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரில் அசைக்க முடியாத அணியாக திகழ்ந்து வருகிறது. இதனை காரணமாக இந்திய அணி முதல் அணியாக அரையிறுதிக்கும் தகுதி பெற்றுள்ளது.

அதிலும் நேற்று நடைபெற்ற போட்டியில், தென்னாபிரிக்க அணியை 243 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் சதமடித்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சச்சினின் 49-சதம் என்ற சாதனையை விராட் கோலி சமன் செய்தார்.

" நான் அவருடன் ஒப்பிடத் தகுந்தவன் அல்ல" - சச்சினின் சரித்திர சாதனையை சமன் செய்த விராட் கோலி பேச்சு !

இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற கோலி, இது குறித்து பேசும்போது, "இந்தத் தொடரில் சிறந்த அணியாக ஆடிவரும் தென் ஆப்பிரிக்காவுடன் மோதுவது என்னில் ஆர்வத்தைத் தூண்டியது. என் பிறந்த நாளில் இந்த சதம் அமைந்ததால் இதை எனக்கு ரசிகர்கள் சிறப்பாக்கியுள்ளனர். அதாவது இன்று கூடுதலாக என்னவோ நடக்கப் போகிறது என்று நினைத்தேன். இது உலகக் கோப்பையில் இன்னொரு போட்டி மட்டுமல்ல என்ற உணர்வு எனக்கு ஆரம்பத்திலேயே இருந்தது.

சச்சின் வாழ்த்துகளை இப்போது எப்படி எடுத்துக் கொள்வது என்று எனக்குத் தெரியவில்லை. என்னுடைய ஹீரோ சச்சின், அவரது சாதனையை சமன் செய்வது என்பது எனக்கு மிகப் பெரிய கவுரவம். அனைவருக்கும் ஒப்பிடுவது பிடிக்கும், ஆனால் நான் அவருடன் ஒப்பிடத் தகுந்தவன் அல்ல, அவரது தரத்துக்கு சமமானவன் அல்ல.என்ன நடந்தாலும் நடக்காவிட்டாலும் சச்சின் டெண்டுல்கர்தான் என் ஹீரோ என்பது மட்டும் மாறப்போவதில்லை" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories